ரஜினி ஹீரோ.. கமல் வில்லன்.. ராஜமெளலியின் அடுத்த பிளான் இது தான்!

சென்னை : பாகுபலி பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர் ஆர் ஆர்

ஆர் ஆர் ஆர் இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது

இந்நிலையில் ராஜமௌலி அடுத்து இயக்கும் திரைப்படத்தில் ரஜினியை ஹீரோவாகவும் கமல்ஹாசன் வில்லனாகவும் நடிக்க வைக்கும் பிளானில் ராஜமவுலி உள்ளாராம்

 இரட்டை வேடத்தில்

இரட்டை வேடத்தில்

பாகுபலி என்ற ஒற்றை படத்தின் மூலம் இந்தியாவையும் கடந்து உலக அளவில் மிக பிரபலம் அடைந்துள்ளார் இயக்குனர் ராஜமௌலி. பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்தது. பிரபாஸ் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். வரலாற்று பின்னணியில் உருவான இந்த படத்தில் தமன்னா, அனுஷ்கா, ராணா,நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

 இரண்டு முன்னணி நடிகர்கள்

இரண்டு முன்னணி நடிகர்கள்

இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி இரண்டுமே மிகப்பெரிய வசூல் செய்தது. தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ்,மலையாளம், கன்னடம்,ஹிந்தி என வெளியான அனைத்து மொழிகளிலும் பாகுபலி சாதனை படைத்த நிலையில் ராஜமெளலியின் அடுத்த படத்தை ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இதில் பாகுபலியை மிஞ்சும் அளவிற்கு ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் என இரண்டு முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கும் ஆர் ஆர் ஆர் என்ற திரைப்படத்தை தற்போது இயக்கியுள்ளார்.

 ராஜமௌலியின் அடுத்த படம்

ராஜமௌலியின் அடுத்த படம்

மற்ற மொழிகளில் இருந்தும் நடிகர்கள் பலர் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்திருக்க தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் pan-india படமாக ஆர் ஆர் ஆர் இன்று வெளியாகியுள்ளது. பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின் கொரோனா சூழல் காரணமாக தள்ளிப் போய்க் கொண்டே இருந்த ஆர் ஆர் ஆர் இன்று வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பாகுபலி செய்த வசூல் சாதனையை ஆர் ஆர் ஆர் முறியடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் ராஜமௌலியின் அடுத்த படம் அடுத்து அவரே வெளியிட்டுள்ள செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

Recommended Video

Jr.NTR -கு Time Sense இல்லை Rajamouli Speech in RRR grand Pre-Release event
 ரஜினி ஹீரோ கமல் வில்லன்

ரஜினி ஹீரோ கமல் வில்லன்

இதுவரை தெலுங்கு நடிகர்களை மட்டும் ஹீரோக்களாக இயக்கி வந்த ராஜமௌலி அடுத்ததாக இந்திய அளவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் ரஜினி மற்றும் கமல் என இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்கும் பிளான் வைத்துள்ளாராம். மேலும் அதில் ரஜினிகாந்த் ஹீரோவாகவும் கமல்ஹாசன் வில்லனாகவும் அல்லது கமல்ஹாசன் ஹீரோவாகவும் ரஜினிகாந்த் வில்லனாகவும்.. மொத்தத்தில் ரஜினி கமல் காம்போவில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என ஆசையாக உள்ளேன் என ராஜமௌலி கூறியுள்ளது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது நடக்குமா என்பது தெரியவில்லை ஆனால் நடந்தால் இந்திய சினிமாவின் மைல்கல்லாக இப்படம் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X