twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்போ லீக்கானது விக்ரம் கதையில்லையா.. அதுதான் ஜெயிலர் கதையா.. இது உருட்டா இல்லை உண்மையா?

    |

    சென்னை: தலைவர் 169 படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகும் முன்னரே படத்தின் டைட்டிலை அவசர அவசரமாக படக்குழு வெளியிட்ட நிலையில், இதுதான் படத்தின் கதை என ஏகப்பட்ட யூகங்கள் டைட்டிலை வைத்து வெளியாகி வருகின்றன.

    நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலரே கிடையாது. அவர் ஒரு கிரிமினல் என்றும் நிஜ ஜெயிலர் கன்னட நடிகர் சிவராஜ்குமார் தான் என்றும் ஒரு பக்கம் சோஷியல் மீடியாவில் சிலர் நெல்சனுக்கே திரைக்கதை எழுதி கொடுத்து வருகின்றனர்.

    மேலும், அதெல்லாம் இல்லைப்பா? விக்ரம் கதைன்னு ஒரு கதை லீக் ஆச்சே அது தான் ரஜினிகாந்தின் ஜெயிலர் கதை என்றும் இன்னொரு உருட்டு ஒன்று உலா வர ஆரம்பித்துள்ளது.

    தொடர்ந்து ட்ரெண்டிங்கில் தலைவர் 169 படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்புக்காக ரசிகர்கள் வெயிட்டிங்! தொடர்ந்து ட்ரெண்டிங்கில் தலைவர் 169 படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்புக்காக ரசிகர்கள் வெயிட்டிங்!

     சஸ்பென்ஸ் உடைஞ்சிடுச்சு

    சஸ்பென்ஸ் உடைஞ்சிடுச்சு

    தலைவர் 169 என்பதே கெத்தாக இருந்தது. படம் வெளியாவதற்கு கொஞ்ச நாள் முன்னாடி ஃபர்ஸ்ட் லுக்குடன் டைட்டிலை அறிவித்து இருக்கலாம் என ஜெயிலர் என டைட்டில் போஸ்டர் வெளியான பின்னர் ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. மேலும், ஒரு ஹாலிவுட் படத்தின் பேக்ரவுண்டை எடுத்து அதில் ரத்தம் சொட்டும் அரிவாளை சொருகி விட்டார் நெல்சன் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர். ஜெயிலர் என டைட்டில் ரிவீல் செய்யப்பட்ட நிலையில், படத்திற்கு உண்டான சஸ்பென்ஸ் உடைந்து விட்டதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

    யாரு ஜெயிலர்

    யாரு ஜெயிலர்

    ஜெயிலர் டைட்டில் வெளியான நிலையில், ஏகப்பட்ட கதைகள் சமூக வலைதளங்களில் உலா வர தொடங்கி உள்ளன. ரஜினிகாந்த் ஜெயிலரே இல்லை என்றும் சிவராஜ்குமார் தான் ஜெயிலர் என்றும் அங்கிருந்து தப்பிக்கும் பக்கா கிரிமினல் தான் ரஜினிகாந்த் என ‘The shawshank redemption' படத்தின் கதையை சொல்லி வருகின்றனர். அந்த கதையை ஏற்கனவே புறம்போக்கு எனும் பொதுவுடமை படத்தில் எஸ்.பி. ஜனநாதன் எடுத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விக்ரமுக்கு சொன்ன கதை

    விக்ரமுக்கு சொன்ன கதை

    நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ஜெயிலர் படத்தின் கதை இதுதான்பா என விக்ரம் படத்திற்கு சமூக வலைதளங்களில் சிலர் உருட்டி விட்ட கதையை மீண்டும் உருட்ட ஆரம்பித்துள்ளனர். சிறையில் இருக்கும் ஒரு பெரிய தீவிரவாதியை தப்பிக்க வைக்க ஜெயிலுக்குள் இன்னொரு நபர் வருவதும் அதை தடுக்க ஜெயிலர் போராடுவதும் தான் கதை என்கின்றனர்.

    ஹாலிவுட் படங்கள்

    ஹாலிவுட் படங்கள்

    இதுமட்டுமில்லாமல் ஹாலிவுட்டில் வெளியான பிரிசன் பிரேக் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களின் கதைகளை அடுக்கி வருகின்றனர். பீஸ்ட் படத்தின் போதும், மால் காப் படத்தின் காப்பி, கூர்கா படத்தின் காப்பி என வெளியான தகவல்கள் அப்படியே படத்தில் இருந்தது தான் அந்த படம் சுவாரஸ்யமே இல்லாமல் போக காரணமாக அமைந்தது. தொடர்ச்சியாக நெல்சன் ஹாலிவுட் படங்களை காப்பியடித்து தான் எடுத்து வருகிறார் என்பதால், இந்த படமும் ஹாலிவுட் பிரிசன் ஸ்டோரியின் காப்பி தான் என இப்பவே முத்திரை குத்தி வருகின்றனர்.

    Recommended Video

    Jailer திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்த Dhanush *Kollywood | Filmibeat Tamil
    டாக்டர் டைட்டில் கசிந்தது

    டாக்டர் டைட்டில் கசிந்தது

    இதெல்லாம் அப்படியே உருட்டு என விட்டு விடவும் முடியவில்லை. விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு டாக்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்தன. ஆனால், நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் தான் டாக்டர் என்பது பின்னர் தெரிய வந்தது. அதனால் நெல்சன் அருகே ஏதாவது ஒரு கருப்பு ஆடு அமர்ந்து கொண்டு அவரது கதைகளை லீக் செய்து வருகிறதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    English summary
    So many rumours circulates about Rajinikanth's Jailer story after Sun Pictures officially announced its title in a very hurry manner. Vikram rumour story and many hollywood story line revolve around as Jailer story.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X