காலா வசூல் எவ்வளவு?: படம் ஹிட்டா, ஃபிளாப்பா?
Recommended Video

சென்னை: காலா படம் ஹிட்டா, ஃபிளாப்பா என்று தெரிந்து கொள்வோம்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படம் கடந்த 7ம் தேதி பிரமாண்டமாக வெளியானது. தனுஷ் தயாரித்த காலா படம் ரிலீஸான மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்தது.
ஆறு நாட்களில் ரூ. 112 கோடி வசூலித்தது. அதன் பிறகு நிறுத்தி நிதானமாக ஆனால் வசூல் செய்து கொண்டே இருக்கிறது காலா.

வசூல்
காலா படம் ரிலீஸான 12 நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடி வசூல் செய்துள்ளது. வசூல் ரூ. 200 கோடியை தொடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ்
காலா ரூ. 140 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. தனுஷ் தான் போட்ட காசை பட ரிலீஸுக்கு முன்பே எடுத்துவிட்டார். ஆம், காலா ரிலீஸாவதற்கு முன்பே ரூ. 230 கோடி சம்பாதித்துவிட்டது.

எப்படி?
காலா படத்தின் தியேட்டர் உரிமை ரூ. 155 கோடிக்கும், சாட்டிலைட் உரிமம் ரூ. 70 கோடிக்கும், இசை உரிமம் ரூ. 5 கோடிக்கும் போனது. அடேங்கப்பா, ரிலீஸுக்கு முன்பே ரூ. 230 கோடியா, அப்படி என்றால் படம் ரிலீஸானால் எத்தனை கோடியோ என்று எதிர்பார்த்தவர்களுக்கு தான் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

கபாலி
கபாலி படத்தை அடுத்து ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்ததால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதற்கிடையே ரிலீஸுக்கு முன்பு கிடைத்த ரூ. 230 கோடியை பார்த்து படம் பாக்ஸ் ஆபீஸை பிரித்து மேய்ந்துவிடும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த பில்ட்அப், ஓவர் எதிர்பார்ப்பால் தான் ஏமாற்றம்.

ரஜினி படம்
போட்ட காசை எடுத்துவிட்டார்கள். ஆனால் ரஜினி படத்திற்கு உண்டான வசூல் இந்த படத்திற்கு இல்லை. ரஜினி வந்தபோது ட்விட்டரே அதிர்ந்தது. ஆனால் காலாவை பார்த்து பாக்ஸ் ஆபீஸ் அதிரவில்லை.


Click it and Unblock the Notifications











