Lal Salaam: ரஜினிக்கு மீண்டும் இந்தி ரீமேக் படமா? அந்த இயக்குநரே இப்படி பண்ணலாமா?

சென்னை: அமிதாப் பச்சன் நடித்த பல இந்தி படங்களை தமிழில் ரீமேக் செய்து தன்னுடைய ஸ்டைலையும் சேர்த்து சூப்பர் ஸ்டாரானார் ரஜினிகாந்த். அதன் பின்னர் பல ஆண்டுகள் இந்தி ரீமேக் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ரஜினிகாந்த் மீண்டும் தற்போது ஒரு இந்தி ரீமேக் படத்தில் நடித்துள்ளார் என ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த் வரும் ஆகஸ்ட் மாதம் அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

அந்த படத்தைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் ரஜினி நடித்து வருகிறார்.

Is Rajinikanths Lal Salaam movie a remake of Kai Po Che?

லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த்: 3 மற்றும் வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட இடைவேளைக்குப் பிறகு லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இந்த படத்தில் ஹீரோவாக நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் மொய்தீன் பாய் எனும் மும்பை தாதாவாக நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்து வருகிறார். மேலும், கிரிக்கெட் வீரர் கபில் தேவும் கேமியோ பண்ணி உள்ளார்.

கதை திருட்டு சர்ச்சை: சமீபத்தில் லைகா நிறுவனத்துக்கு தான் ஓராண்டுக்கு முன்பாக சொன்ன கால்பந்தாட்ட கதையை அப்படியே கிரிக்கெட் விளையாட்டாக மாற்றி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படமெடுத்து வருகிறாரா? என்கிற சந்தேகம் இருப்பதாக எழுத்தாளர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

ஆனால், இந்தப் படத்தின் கதையே வேறு என அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தின் கதை பாலிவுட் படத்தின் ரீமேக் என்கிற புதிய தகவல் ஒன்று பூகம்பமாக கிளம்பி உள்ளது.

இந்தி ரீமேக் படத்தில் ரஜினியா: சிவா, நான் வாழ வைப்பேன், பில்லா, தர்மத்தின் தலைவன், தீ, மிஸ்டர் பரத், பணக்காரன், மாவீரன், படிக்காதவன், வேலைக்காரன் உள்ளிட்ட பல படங்கள் அமிதாப் பச்சன் இந்தியில் நடித்த படங்களின் தமிழ் ரீமேக் தான்.

அமிதாப் பச்சன் படங்களை தாண்டி மற்ற நடிகர்கள் நடித்த இந்தி படங்களையும் தமிழில் ரீமேக் செய்து ரஜினி நடித்துள்ளார். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் ரீமேக் படங்களை கைவிட்டு வந்தார் ரஜினிகாந்த். இந்நிலையில், மீண்டும் பாலிவுட் பட ரீமேக்கில் அவர் நடிக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Is Rajinikanths Lal Salaam movie a remake of Kai Po Che?

சுஷாந்த் சிங் ராஜ்புத் படம்: மறைந்த பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்து 2013ம் ஆண்டு வெளிவந்த கை போச்சே (kai po che) படத்தின் ரீமேக் தான் லால் சலாம் படம் என்றொரு ஹாட் டாபிக் கோலிவுட்டில் டிரெண்டாகி வருகிறது.

கை போச்சே படத்தின் உரிமையை கைப்பற்றித் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார் என்கின்றனர். அந்த படத்தில் வரும் ஒரு சின்ன டான் கதாபாத்திரத்தை தான் ரஜினிக்காக டெவலப் செய்து இந்த படத்தை இயக்கி வருகிறார் எனக் கூறப்படுகிறது. கை போச்சே படத்தின் கதையும் கிரிக்கெட் விளையாட்டையும் இரு நண்பர்களை மையப்படுத்திய கதை தான் என்பது குறிப்பிடத்தக்கது. லால் சலாம் அந்த படத்தின் ரீமேக்கா அல்லது வேறு கதையா என்பது குறித்து சீக்கிரமே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X