பிக் பாஸ் சீசன் 6 முதல் போட்டியாளர் யார் தெரியுமா.. விரைவில் அறிவிப்பு.. ரசிகர்கள் வெயிட்டிங்!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக இருந்துவரும் பிக்பாஸ் தற்போது 5 சீசன்களை முடித்துள்ளது.

விரைவில் 6வது சீசன் துவங்கவுள்ளது. இதை கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் முதல் போட்டியாளர் யார் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

விஜய் டிவி

விஜய் டிவி

விஜய் டிவி எப்போதுமே நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து வருகிறது. அந்த அளவில் இந்த சேனலின் பிக் பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளன. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை சிறப்பாக கடந்துள்ளது.

5 சீசன்களை தொகுத்த கமல்

5 சீசன்களை தொகுத்த கமல்

இந்த 5 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து நேரலையாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு இருந்தது. ஆனாலும் விஜய் டிவியின் பிக்பாஸ் அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

பிக் பாஸ் அல்ட்டிமேட்

பிக் பாஸ் அல்ட்டிமேட்

தினந்தோறும் அந்த நேரம் வரை காத்திருந்து பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கவே ரசிகர்கள் அதிக ஆர்வம் செலுத்தினர். பிக் பாஸ் அல்ட்டிமேட்டையும் கமலே தொகுத்து வழங்கினார். ஆனால் தனது சூட்டிங்கிற்கான நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்று கூறி பாதியிலேயே அவர் விலகினார். தொடர்ந்து நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார்.

விரைவில் 6வது சீசன்

விரைவில் 6வது சீசன்

இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் விரைவில் துவங்கவுள்ளதாக விஜய் டிவி அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கமலே தொகுத்து வழங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Recommended Video

James Vasanthan | குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசி சம்பதிக்கனுமா ? *TV | Filmibeat Tamil
முதல் போட்டியாளர் யார்?

முதல் போட்டியாளர் யார்?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிவரும் ரக்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறதாம். மேலும் டி இமானின் மனைவியிடம் போட்டியாளராக பங்கேற்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X