twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிறுநீரக பிரச்சனை: அம்மாவுடன் அமெரிக்காவுக்கு சென்ற ராணா?

    By Siva
    |

    ஹைதராபாத்: பாகுபலி புகழ் ராணாவுக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    பாகுபலி படத்தில் பல்லாளதேவனாக நடித்து அசத்தியவர் தெலுங்கு நடிகர் ராணா. அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பேச்சு கிளம்பியுள்ளது. ராணாவுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம்.

    Is Rana having helath issue?

    முதலில் ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்ற அவர் பின்னர் மும்பையில் சிகிச்சை பெற்றதாகவும் இருப்பினும் பலனில்லை என்றும் தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

    இதையடுத்து ராணா தனது அம்மாவுடன் அமெரிக்கா சென்றுள்ளாராம். அவருக்கு பரிசோதனைகள் செய்த பிறகு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவையா என்பது முடிவு செய்யப்படுமாம்.

    இந்த பிரச்சனை குறித்து ராணாவோ அவரது குடும்பத்தாரோ இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ராணாவுக்கு ஏதோ பிரச்சனை என்று அவரின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    முன்பும் கூட ராணாவுக்கு சிறுநீரக பிரச்சனை என்று பேசப்பட்டது. இது குறித்து அறிந்த அவர் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், நலமாக இருப்பதாகவும் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ஜெர்சி தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கை ராணா தயாரிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

    ஜெர்சி படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய உள்ளனர். அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் நடித்து அசத்திய பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரையே ஜெர்சி ரீமேக்கில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம். ஜெர்சி படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர்களான அல்லு அரவிந்த், தில் ராஜு ஆகியோர் வாங்கியுள்ளனர்.

    English summary
    Buzz is that actor Rana Daggubati has left for the US to get treatment for kidney ailment.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X