லாக்டவுனால் பட்ஜெட்டை குறைக்க முடிவு.. 'நாகினி' தொடரில் இருந்து பிரபல பிக்பாஸ் நடிகை நீக்கம்?

By

சென்னை: சூப்பர் ஹிட்டான நாகினி தொடரின் நான்காம் பாகத்தில் இருந்து பிரபல பிக்பாஸ் நடிகை நீக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

Sindhu Bairavi நடிகை Rashmi Desai நாகினி 4ல் நீக்கபட்டாரா?

இந்தியில் சூப்பர் ஹிட்டானத் தொடர், நாகினி. இதன் முதல் தொடரில் மௌனி ராய், அதா கான், அர்ஜுன் பிஜ்லானி, சுதா சந்திரன் ஆகியோர் முன்னணி கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

தமிழ் தெலுங்கு மொழிகளிலும் இந்தப் தொடர் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இதன் முதல் பாகம், சன் டிவியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

பாம்பு உருவம்

பாம்பு உருவம்

பாம்பு கதையான இந்த தொடர், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்துப் போக இவர்கள் தொடர்ந்து இந்த சீரியலைப் பார்த்து வருகின்றனர். இச்சாதாரி பாம்புகள் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு அவ்வப்போது மனித உருவமும், பாம்பு உருவமுமாக மாறி மாறி இருப்பதுதான் அது என்று புதிய அர்த்தத்தை இந்த தொடர் மூலம் சொன்னார்கள்.

நான்காம் பாகம்

நான்காம் பாகம்

அதோடு, நாகமணி விலை மதிப்பற்றது, அதை மனிதர்கள் எடுத்து வைத்துக்கொண்டு, இச்சாதாரி பாம்புகளை அலைய விடுவது என்பது போல கதை அமைக்கப்பட்டு இருந்தது. இரண்டாம் பாகம், கலர்ஸ் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. நாகினி 3 ஆம் பாகமும் ஒளிபரப்பான நிலையில், இப்போது நான்காம் பாகம் வெளியாகி வருகிறது. இதில் நடிக்கும் நடிகைகளும் பிரபலமாகி விடுகின்றனர்.

பிக்பாஸ் 13

பிக்பாஸ் 13

நான்காவது பாகத்தில் நியா ஷர்மா, விஜயேந்திர குமேரியா, அனிதா ஹசனந்தனி ஆகியோர் முன்னணி கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தி பிக்பாஸ் 13 வது தொடர் மூலம் பிரபலமான ரஸாமி தேசாய், இந்த தொடரில் இணைந்தார். அவர் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்த நிலையில் அதைப் படக்குழுவும் உறுதி செய்திருந்தது.

ஜாஸ்மின் பாசின்

ஜாஸ்மின் பாசின்

நாகினி 4 தொடரின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் முக்தா தோண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். அதில் ரஸாமி தேசாய் நடிக்கும் காட்சி இடம்பெற்று இருந்தது. ரஸாமி, அதில் நடித்த ஜாஸ்மின் பாசினுக்குப் பதிலாக இடம்பெறுவார் என்று கூறப்பட்டது.

படப்பிடிப்புகள்

படப்பிடிப்புகள்

இந்நிலையில், லாக்டவுன் காரணமாக மொத்த சினிமா மற்றும் சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தயாரிப்பாளர்கள் பலத்தை நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர். அடுத்து எப்போது ஷூட்டிங் தொடங்கும் என்று தெரியாத நிலையில், நஷ்டத்தைச் சரிகட்ட, சீரியல் தயாரிப்பாளர்கள் பட்ஜெட்டை குறைத்து வருகின்றனர்.

நீக்குவது எளிது

நீக்குவது எளிது

இதையடுத்து நாகினி தொடரில் இருந்து ரஸாமியை நீக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முடிவை தயாரிப்புத் தரப்பு அவரிடம் தெரிவிக்கவில்லை என்றும் சமீபத்தில்தான் அவர் இந்த தொடரில் இணைந்திருப்பதால், அதில் இருந்து அவர் கேரக்டரை நீக்குவது எளிது என்றும் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X