குவியும் பட வாய்ப்புகள்: சம்பளத்தை உயர்த்திய கார்த்தி ஹீரோயின்?
Recommended Video
சென்னை: நடிகை ரஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம்.
விஜய் தேவரகொண்டாவின் கீத கோவிந்தம் படம் மூலம் பிரபலமானவர் கன்னட நடிகையான ரஷ்மிகா மந்தனா. அவரும் விஜய் தேவரகொண்டாவும் மீண்டும் சேர்ந்து நடித்த டியர் காம்ரேட் படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
வாய்ப்புகள் வந்து குவியும் இந்த நேரத்தில் ரஷ்மிகா தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது.

ரஷ்மிகா
ரஷ்மிகா படம் ஒன்றுக்கு ரூ. 40 லட்சம் வாங்கி வந்தார். தனக்கு மவுசு அதிகரித்துள்ளதால் தற்போது ரூ. 60 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை கேட்கிறாராம். டோலிவுட்டில் இன்னும் வளரவே இல்லை அதற்குள் சம்பளத்தை உயர்த்துவதா என்று பேசப்படுகிறது.

ஹீரோயின்
கடந்த ஆண்டு கன்னட திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகை ரஷ்மிகா மந்தனா தான். போகரு கன்னட படத்திற்காக அவருக்கு ரூ. 64 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டது. தற்போது ரஷ்மிகா தமிழ் திரையுலகிற்கும் வந்துள்ளார்.

விஜய்
ரஷ்மிகா பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் கார்த்தி 19 படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். இந்நிலையில் விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ரஷ்மிகா தான் ஹீரோயின் என்று கூறப்படுகிறது.

மகேஷ் பாபு
அனில் ரவிபுடி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ரஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ரஷ்மிகா.


Click it and Unblock the Notifications