மாளவிகா இல்லையாமே... ஹரி இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாகிறார் ராஷ்மிகா மந்தனா?

By

சென்னை: ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க, ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து அங்கு நடித்து வந்த அவர், சலோ என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

பின்னர், விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம் என்ற படத்தில் நடித்தார். இது சூப்பர் ஹிட்டானது.

சுல்தான் ஹீரோயின்

சுல்தான் ஹீரோயின்

பிசியாகிவிட்ட ராஷ்மி, விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் படம் மூலம் தமிழுக்கும் வந்தார். மகேஷ்பாபுவுடன் இவர் நடித்துள்ள சைலேரு நீக்கெவ்வரு என்ற தெலுங்கு படம் கடந்த மாதம் முன் வெளியாகி ஹிட்டானது. இவர், தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்துவருகிறார். இதை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார்.

வீட்டில் ஐடி ரெய்டு

வீட்டில் ஐடி ரெய்டு

கர்நாடக மாநிலம் குடகுவில் உள்ள இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

Income Tax Ride in Rashmika House | Rashmika Mandanna | sarileru neekevvaru
மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன்

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை மாளவிகா மோகனன், இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. சமீபத்தில் மாளவிகா மோகனனை, இயக்குனர் ஹரி சென்னையில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது படத்தில் அவரது கேரக்டர் பற்றி ஹரி விளக்கியதாகக் கூறப்பட்டது.

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா

மாளவிகா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் நடித்திருந்தார். இப்போது மாஸ்டர் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா படத்தில் மாளவிகா நடிக்கவில்லை என்றும் நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X