ரவி சாஸ்திரியை காதலிக்கும் நடிகை நிம்ரத் கவுர்
பாலிவுட் நடிகை நிம்ரத் கவுரும் ரவி சாஸ்திரியும் காதலிப்பதாக கூறப்படுகிறது
சென்னை: பாலிவுட் நடிகைக்கும் ரவி சாஸ்திரிக்கும் காதல் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் ரவி சாஸ்திரி. இவரும் பாலிவுட் நடிகை நிம்ரத் கவுரும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நிம்ரத் ஒன் நைட் வித் த கிங், லஞ்ச் பாக்ஸ், அக்ஷய் குமாரின் ஏர் லிஃப்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தி டெஸ்ட் கேஸ் என்ற வெப் சீரீஸிலும் நடித்திருந்தார்.
நிம்ரத் கவுரும் ரவி சாஸ்திரியும் இணைந்து ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி கார் நிறுவனமான "ஆடி" விளம்பரத்தில் 2015 ஆம் ஆண்டு தோன்றினர். அதன் பிறகு தான் பழக்கம் ஏற்பட்டதா? அல்லது இருவரும் காதலிக்கிறார்கள் எனத் தெரிந்தே கார் விளம்பரத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டதா எனத் தெரியவில்லை. 56 வயதாகும் ரவி சாஸ்திரியின் மனைவி விவகாரத்து ஆகி பிரிந்துவிட்ட நிலையில் அவருக்கு பத்து வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
36 வயதாகும் நடிகை நிம்ரத் கவுரும், ரவி சாஸ்திரியும் ஒன்றாக சுற்றி வருகின்றனர். அது காதல் என சொல்லப்படுகிறது.
கிரிக்கெட் வீரர்கள் பாலிவுட் நடிகைகளை காதலிப்பது ஒன்றும் புதிதில்லை என்றாலும், ரவி சாஸ்திரி திருமணத்திற்கு முன்பு சயீப் அலிகானின் முன்னாள் மனைவியும் நடிகையுமான அமிர்தா சிங்கை காதலித்ததாக சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











