For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அவங்க தான் சண்டை போட சொல்றாங்க.. ரகசியத்தை உடைத்த தாமரை.. கமல் எப்படி முட்டுக் கொடுக்கப் போகிறாரோ?

  |

  சென்னை: பிக் பாஸ் வீட்டில் நாங்களா சண்டை போடுறதில்லை மாமா.. அவங்க தான் சண்டை போட சொல்றாங்க என வசமாக போட்டுக் கொடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை காலி செய்துள்ளார் தாமரை செல்வி.

  பிக் பாஸ் நிகழ்ச்சியும் மற்ற ரியாலிட்டி ஷோக்களை போலவே ஒரு ஸ்க்ரிப்டட் ஷோ தான் என்கிற கருத்து மக்கள் மத்தியில் இருந்தாலும், அந்த நிகழ்ச்சியின் மீது இன்னமும் பலருக்கு இருக்கும் நம்பிக்கை தான் அந்த நிகழ்ச்சியை அடுத்தடுத்த சீசன்களுக்கு எடுத்து செல்கிறது.

  இந்நிலையில், தாமரை செல்வி ஓப்பனாக உடைத்து பேசியதை பிக் பாஸ் எடிட்டர் கவனிக்காமல் எடிட் பண்ண மறந்து விட்டாரோ என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  படு சுட்டி

  படு சுட்டி

  பிக் பாஸ் வீட்டில் அக்‌ஷராவுக்கு அடுத்து அதிகமாக பொருட்களை உடைத்தது என்றால் அது தாமரை செல்வியின் செல்ல மகன் மேஷ வர்ஷன் தான். படு சுட்டியான தாமரையின் மகன் இஷ்டத்துக்கு எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு உடைக்க பிரியங்கா அவனை உற்சாகப்படுத்தினார். ஆனால், உடனடியாக பிக் பாஸ் உடைக்காமலும், யாரையும் அடிக்காமலும் விளையாடுங்க என அறிவுறுத்த மேஷ வர்ஷனின் சேட்டை குறைந்து விட்டது.

  காப்பியடிக்கும் பிரியங்கா

  காப்பியடிக்கும் பிரியங்கா

  குழந்தைகள் வந்தால் தனியாக அழைத்துச் சென்று அக்‌ஷரா ஸ்கோர் செய்கிறார். இதை நாமும் செய்து ஸ்கோர் ஏற்றலாம் என நினைத்துக் கொண்ட பிரியங்கா தாமரையின் மகன் மற்றும் சஞ்சீவின் குழந்தைகளிடம் தாராளமாக விளையாட ஆரம்பித்தார்.

  இனிகோ சார் நீங்களா

  இனிகோ சார் நீங்களா

  தாமரை செல்வியின் கணவர் பார்த்தசாரதியை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஹீரோ இனிகோ போல இருக்காரே என கொண்டாட ஆரம்பித்து விட்டனர். தாமரை இது வரை ஜெயிக்க காரணமே ராஜு போன்ற போட்டியாளர்கள் செய்த உதவி என்றும் தாமரைக்கு அதிகம் சொல்லி கொடுத்ததற்கு நன்றி என பிரியங்காவுக்கும் நன்றி கூறினார் பார்த்தசாரதி.

  பாவனியும் பாயாசமும்

  பாவனியும் பாயாசமும்

  பிக் பாஸ் வீட்டில் எல்லாருக்கும் பாயாசம் கொடுத்து விட்டு பாவனிக்கு நீ பாயாசம் கொடுக்காதது தவறான செயல் என நக்கீரர் போல தனது மனைவியாக இருந்தாலும் தவறு செய்தால் தவறு தான் சுட்டிக் காட்ட பாவனியை மடி மீது அமர வைத்து வைத்து ஊட்டி விட்டார் தாமரை.

  சண்டை போட சொல்றாங்க

  சண்டை போட சொல்றாங்க

  எல்லாரும் நல்லவர்கள் தான் ஏன் திடீர்னு சண்டை போடுறீங்க.. சில நேரத்தில் எதையும் புரிந்து கொள்ளாமல் நீ கத்துவது பிடிக்கவில்லை என பார்த்தசாரதி சொல்ல நாங்க ஜாலியா தான் இருக்கோம் மாமா திடீர்னு அவங்க தான் சண்டை போட சொல்றாங்க என சைக்கிள் கேப்பில் தாமரை ஒட்டுமொத்த பிக் பாஸ் ஷோவுக்கும் வேட்டு வைத்ததை எடிட்டர் கவனிக்கவில்லையோ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி பிக்பாஸ் நிகழ்ச்சியின் நம்பகத்தன்மை குறித்து விவாதம் நடத்தி வருகின்றனர்.

  Recommended Video

  எதிர்பாராததை எதிர்பாருங்கள்!! இந்த வாரம் BBல் இருந்து வெளியேறும் Contestant | Varun, Niroop, Akshara
  கமல் முட்டுக் கொடுப்பாரா

  கமல் முட்டுக் கொடுப்பாரா

  தொடர்ந்து பிக் பாஸ் ஸ்க்ரிப்ட் இல்லை என முட்டுக் கொடுத்து வரும் கமல் இந்த வாரம் இதற்கு எப்படி முட்டுக் கொடுக்கப் போகிறார் என்கிற கேள்வியும், அதற்கு பதிலாக, கடந்த வாரம் அமீர் பாவனிக்கு முத்தம் கொடுத்த விஷயத்தை அப்படியே கண்டுகொள்ளாமல் கமல் கடந்து சென்றதை போலவே இந்த வாரமும் கமல் இந்த விவகாரத்தை கடந்து சென்று விடுவார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  English summary
  Thamarai Selvi reveals the secret about the Bigg Boss reality show in front of her husband Parthasarathy shocks Bigg Boss fans.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X