twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தி சினிமாவில் சான்ஸ் பிடிக்க இதுதான் ஈசியான ரூட்டா..? என்ன சொல்கிறார்கள் இந்த ஹீரோயின்கள்?

    By
    |

    சென்னை: பாலிவுட்டில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு இதுதான் சரியான வழி என்று கூறுவது பற்றி நடிகைகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    நடிகர் சுஷாந்த் சிங் மறைவை அடுத்து பாலிவுட்டில் நெபோடிசம் குறித்து குரல் எழுந்துள்ளது. இதுபற்றி பேசிவருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் இந்தப் பஞ்சாயத்து பரபரப்பாகி இருக்கிறது. நெட்டிசன்கள் காரசாரமாக இதுபற்றி மோதி வருகின்றனர்.

    தனது நீண்ட நாள் காதலருடன் பிரபல 'பரபரப்பு' நடிகை திருமண நிச்சயதார்த்தம்.. மோதிரத்துடன் செம போஸ்! தனது நீண்ட நாள் காதலருடன் பிரபல 'பரபரப்பு' நடிகை திருமண நிச்சயதார்த்தம்.. மோதிரத்துடன் செம போஸ்!

    சோனாக்‌ஷி சின்ஹா

    சோனாக்‌ஷி சின்ஹா

    வாரிசு நடிகர், நடிகைகள், அவர்கள் இல்லாத அவுட்சைடர்கள் பற்றி விவாதித்து வருகின்றனர். திறமையில்லாத சினிமா பிரபலங்களின் வாரிசுகளால், மற்றவர்களின் வாய்ப்பு பறிக்கப் படுவதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக நடிகைகள், சோனாக்‌ஷி சின்ஹா உட்பட சில நடிகைகள், சமூக வலைதளங்களில் இருந்து விலகினர்.

    ரகுல் பிரீத் சிங்

    ரகுல் பிரீத் சிங்

    இந்நிலையில், இந்தி சினிமாவில் தற்போது நடித்துவரும் டாப்ஸி பன்னு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் போன்றவர்கள் தென்னிந்தியா சினிமாவில் இருந்து சென்றவர்கள். இதனால் இந்தி சினிமாவில் வாய்ப்பு பெற, தென்னிந்திய சினிமா உட்பட மாநில மொழி படங்களில் நடிப்பது ஒரு தகுதியாகப் பார்க்கப்படுகிறதா? அப்படி வரும் நடிகைகளை எப்படி பார்க்கிறார்கள் என்று பாலிவுட்டில் கேள்வி எழுந்துள்ளது.

    சவுத் நடிகை

    சவுத் நடிகை

    இதுபற்றி நடிகை டாப்ஸி கூறும்போது, 'தமிழ், தெலுங்கில் 10 படங்களில் நடித்து முடித்த பிறகுதான் இந்திக்குச் சென்றேன். அங்கு என்னை அப்போதும் புதுமுக நடிகைபோல்தான் பார்த்தார்கள். கூடவே அவர் 'சவுத் நடிகை' என்றும் முத்திரையும் குத்தினார்கள்' என்று தெரிவித்தார். ஆனால் நடிகை தமன்னா, இதை பாசிட்டிவாக பார்க்கிறார்.

    Recommended Video

    Thappad Taapsee Slap Scene Making, 7 Takes | Anubhav Sinha | Taapsee Pannu
    எதிர்ப்பு இருக்கும்

    எதிர்ப்பு இருக்கும்

    அவர் கூறும்போது, 'எப்போதுமே ஆரம்பத்தில் எதிர்ப்பு இருக்கும். நீங்கள் உங்களை நிலைநிறுத்தி விட்டால், பிறகு நிலைமை சீராகும். அதற்கு முன் ரசிகர்களின் ஆதரவை பெற வேண்டும். அதிர்ஷ்டவசமாக ரசிகர்கள் இன்று வளர்ந்திருக்கிறார்கள். ஒடிடி-யின் வருகையால் விதவிதமான ஐடியாக்களுக்கும் அவர்கள் தயாராகி வருகிறார்கள். இது சிறப்பானது என்கிறார்.

    விளக்க வேண்டும்

    விளக்க வேண்டும்

    நடிகை ரகுல் பிரீத் சிங் கூறும்போது, 'எனக்கு போஜ்புரி, பெங்காலி நடிகர்களை தெரியாது. அதை போலதான் பாலிவுட்டிலும் என்னை அறிந்திருக்கமாட்டார்கள். நான் தென்னிந்தியாவில் 18 படங்களில் நடித்திருக்கிறேன் என்பதை ரசிகர்களுக்கு விளக்க வேண்டும். கூடவே, புதியவர் போலதான் பாலிவுட்டில் நடிக்க வேண்டும். அது சரிதானே என்கிறார்.

    பாலிவுட்டில் மதிப்பில்லை

    பாலிவுட்டில் மதிப்பில்லை

    பெங்காலி நடிகை ஸ்வாஸ்திகா முகர்ஜி கூறும்போது, 'எங்களுக்கு தேசிய விருது கிடைத்தாலும் பாலிவுட்டில் மதிப்பில்லை. கண்டுகொள்ளவே மாட்டார்கள். நானும் பல ஆடிஷன்களுக்கு சென்றிருக்கிறேன். வழக்கமான ரியாக்சன் தான் கிடைக்கும். எங்கள் பகுதியிலும் இந்தி சினிமாவுக்கு மார்க்கெட் இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறார்கள் என்கிறார். இவர் பதாய் ஹோ, தில் பெச்சாரா படங்களில் நடித்துள்ளார்.

    English summary
    Is regional cinema to Bollywood an easy route? Taapsee Pannu, Rakul Preet, Tamannaah Bhatia open up about their transition
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X