»   »  'ரெமோ' ஹாலிவுட் படமான டூட்ஸியின் காப்பியா?: இயக்குனர் விளக்கம்

'ரெமோ' ஹாலிவுட் படமான டூட்ஸியின் காப்பியா?: இயக்குனர் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் ஹாலிவுட் படமான டூட்ஸியின் காப்பி அல்ல என்று இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் தெரிவித்துள்ளார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படம் வரும் 7ம் தேதி வெளியாக உள்ளது. படத்தில் சிவா பெண் வேடம் போட்டுள்ளார்.

Is Remo a copy of Tootsie?: Explains director

இதை பார்த்தவர்கள் ரெமோ ஹாலிவுட் படமான டூட்ஸியின் காப்பி என்றார்கள். இந்நிலையில் இது குறித்து பாக்யராஜ் கண்ணன் கூறுகையில்,

ஒரு காதல் படத்தை எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு படத்திற்கும் ஒரு காதல் கோணம் உள்ளது. அதே போன்று ஒரு ஹீரோ பெண் வேடத்தில் வருவது போன்று ஹாலிவுட் உள்பட பல மொழிப் படங்கள் இருக்கும். அதனால் மக்கள் எளிதில் அதனுடன் ஒப்பிடுவார்கள்.

படத்தை பார்த்துவிட்டு ஒப்பிட்டால் பரவாயில்லை. ஆனால் ட்ரெய்லரை பார்த்துவிட்டு கூறுவதற்கு பதில் அளிக்க வேண்டும். ரெமோ டூட்ஸியின் தழுவல் அல்ல என்றார்.

English summary
Bakkiyaraj Kannan said that Sivakarthikeyan starrer Remo is not a copy of hollywood movie Tootsie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil