"காப்பி அடிக்கிறதைகூட ஒழுங்கா செய்ய மாட்டீங்களா".. சாஹோ படக்குழுவை நக்கலடிக்கும் பிரெஞ்சு டைரக்டர்!

சாஹோ திரைப்படம் தன்னுடைய லார்கோ விஞ்ச் படத்தின் அப்பட்டமான காப்பி என பிரபல பிரெஞ்சு இயக்குனர் ஜெரோம் சாலே தெரிவித்துள்ளார்.

Recommended Video

Saaho Movie Review

சென்னை: தன்னுடைய படத்தை அப்படியோ காப்பியடித்து சாஹோ திரைப்படத்தை எடுத்திருப்பதாக பிரபல பிரெஞ்சு இயக்குனர் ஜெரோம் சாலே குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் நடித்த படம் சாஹோ. கடந்த வாரம் ரிலீசான இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. ஆனால் விமர்சன ரீதியாக கடும் சரிவை சந்தித்துள்ளது.

சாஹோ திரைப்படம் 300 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரேமும் பிரமாண்டமாக தெரிய வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து வேலை செய்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் கதையும், திரைக்கதையும் மிகவும் சுமாராக இருப்பதால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 காப்பியடிக்கப்பட்ட செட்

காப்பியடிக்கப்பட்ட செட்

சாஹோ படத்தில் இடம்பெற்ற பேபி வோன்ட் யூ டெல் மி பாடலில் வரும் ஒரு குறிப்பிட்ட செட் பெங்களூரை சேர்ந்த ஷிலோ ஷிவ் சுலேமானின் படைப்பில் இருந்து காப்பியடித்தது என புகார் எழுந்தது. இதுகுறித்து ஷிலோ ஷிவ் தனது சமூக வலைதளத்தை அம்பலப்படுத்தி படக்குழுவை விளாசினார்.

புதிய சர்ச்சை

புதிய சர்ச்சை

இந்நிலையில் சாஹோ திரைப்படம் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. தன்னுடைய லார்கோ விஞ்ச் படத்தை அப்படியோ காப்பியடித்து சாஹோ படத்தை எடுத்திருப்பதாக பிரபல பிரெஞ்சு இயக்குனர் ஜெரோம் சாலே குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றையும் அவர் வேளியிட்டுள்ளார். இந்நிலையில் சாஹோ திரைப்படம் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. தன்னுடைய லார்கோ விஞ்ச் படத்தை அப்படியோ காப்பியடித்து சாஹோ படத்தை எடுத்திருப்பதாக பிரபல பிரெஞ்சு இயக்குனர் ஜெரோம் சாலே குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றையும் அவர் வேளியிட்டுள்ளார்.

ஜெரோம் நக்கல்

ஜெரோம் நக்கல்

அதில் அவர், " லார்கோ விஞ்சின் இரண்டாவது ஃரீமேக் இது (சாஹோ). முதலாவதை போலவே இதுவும் மிக மோசம். தெலுங்கு இயக்குனர்களே எனது படத்தை திருடி எடுத்தால், தயவு செய்து அதை ஒழுங்காக எடுங்கள். இந்தியாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என நினைக்கிறேன்", என தெரிவித்துள்ளார்.

படத்திற்கு பின்னடைவு

படத்திற்கு பின்னடைவு

ஜெரோமின் இந்த டிவீட் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே ரசிகர்கள் சாஹோ படத்தை கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள். இந்நிலையில் பிரெஞ்சு இயக்குனர் வைத்திருக்கும் குட்டு, படத்திற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X