சமந்தா கர்ப்பமா?: தேதி மட்டும் தான்...
Recommended Video

சென்னை: கர்ப்பம் தரிப்பது, குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து பேசியுள்ளார் சமந்தா.
சமந்தா தனது காதலரான தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு இருவரும் அவரவர் படங்களில் நடிக்கச் சென்றுவிட்டனர்.
இருவருமே படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் குழந்தை பற்றி சமந்தா கூறியிருப்பதாவது,

குழந்தை
எப்பொழுது குழந்தை பெற வேண்டும் என்று நானும், சைதன்யாவும் முடிவு செய்துவிட்டோம். எனக்கு எப்பொழுது குழந்தை வேண்டும் என்ற தேதியை நான் குறித்துவிட்டேன்.

சைதன்யா
தேதி குறித்தாகிவிட்டது. ஏதோ அந்த தேதியில் தான் நடக்கும் என்பது போன்று குறித்துவிட்டோம். நான் குழந்தை பெற்ற பிறகு அது தான் என் உலகம் என்று இருக்கும்.

நடிப்பு
வேலை செய்யும் தாய்மார்களை மிகவும் மதிக்கிறேன். குழந்தை பிறந்த பிறகு சில ஆண்டுகள் நான் எங்குமே செல்ல மாட்டேன். குழந்தையை மட்டும் கவனித்துக் கொண்டிருப்பேன்.

குடும்பம்
திருமணத்திற்கு முன்பு என்னை பற்றி மட்டுமே யோசிப்பேன். ஆனால் தற்போது குடும்பத்தை பற்றியும் யோசிக்க வேண்டி உள்ளது. வீட்டிற்கு தேவையானதை நானும், சைதன்யாவும் தான் செய்கிறோம். அது எனக்கு பிடித்துள்ளது என்கிறார் சமந்தா.


Click it and Unblock the Notifications











