வெளிநாட்டவரை காதலிக்கிறாரா ஜெயம் ரவி பட நடிகை?

By Siva

பெங்களூர்: நடிகை சம்யுக்தா ஹெக்டே சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படத்தால் அவர் வெளிநாட்டவர் ஒருவரை காதலிப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி கன்னட படம் மூலம் 17 வயதில் நடிகையானவர் பெங்களூரை சேர்ந்த சம்யுக்தா ஹெக்டே. ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த வாட்ச்மேன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து வரும் கோமாளி படத்தில் காஜல் அகர்வால் தவிர்த்து சம்யுக்தா ஹெக்டேவும் நடிக்கிறார். இது தவிர்த்து அவர் தீயல் படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அதிகம் பின்தொடரப்படும் கன்னட நடிகை என்றால் அது சம்யுக்தா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டவர்

வெளிநாட்டவர்

சம்யுக்தா ஹெக்டே படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் ஐரோப்பாவுக்கு சென்ற இடத்தில் அவர் வெளிநாட்டவர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சாக்லேட்டும், வெனிலாவும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

சம்யுக்தா

சம்யுக்தா

சம்யுக்தா ஹெக்டே கவர்ச்சியான உடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவார். ஆனால் அவர் இதுவரை தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எதுவும் தெரிவித்தது இல்லை. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சம்யுக்தா அந்த வெளிநாட்டவரை காதலிப்பதாக நினைக்கிறார்கள்.

மது

மது

சம்யுக்தா பார்ட்டிகளுக்கு செல்வார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் ஐரோப்பாவுக்கு சென்ற இடத்தில் மது அருந்தியபோது எடுத்த புகைப்படத்தையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அமைதி

அமைதி

சம்யுக்தா புகைப்படம் வெளியிட்டார் என்பதற்காக அவர் வெளிநாட்டவரை காதலிக்கிறார் என்று கூறிவிட முடியாது. அவருக்கு பயணம் செய்வது என்றால் பிடிக்கும். பயணம் செய்வதால் மனம் ரிலாக்ஸாவதாக அவர் தெரிவித்துள்ளார். நான் தினமும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன். இயற்கையுடன் ஒன்றிவிடுவது நன்றாக உள்ளது என்கிறார் சம்யுக்தா ஹெக்டே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X