பிக்பாஸ் வீட்டில் நடிக்கிறாரா தர்ஷனின் முன்னாள் காதலி? எல்லாம் இப்படி சொல்லிட்டாங்களே!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சனம் ஷெட்டி தன்னுடைய ஒரிஜினாலிட்டியை மறைத்து நடிப்பதாக ஹவுஸ்மேட்டுகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரபல மாடல் அழகியான சனம் ஷெட்டி, ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஹன்சிகா மோத்வானியின் 50வது படமான மகா என்ற படத்திலும் நடித்து வருகிறார் சனம் ஷெட்டி. இவரும் கடந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற இலங்கை மாடலனா தர்ஷனும் காதலித்து வந்தனர்.

தர்ஷனுடன் காதல்

தர்ஷனுடன் காதல்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே தர்ஷனுக்கும் சனம் ஷெட்டிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் கணவன் மனைவியை போன்று வாழ்ந்தனர். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பிய பிறகு, தர்ஷன சனம் ஷெட்டியை விட்டு விலகினார்.

தர்ஷன் குற்றச்சாட்டு

தர்ஷன் குற்றச்சாட்டு

இதனால் அதிர்ச்சியடைந்த சனம் ஷெட்டி, தர்ஷனுக்கு தான் 20 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாகவும் அதனை திருப்பி பெற்று தரவேண்டும் என்றும் போலீஸில் புகார் அளித்தார். சனமின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த தர்ஷன், சனமுக்கு அவருடைய முன்னாள் காதலருடன் தொடர்பு இருப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் கூறினார்.

சீசன் 4ல் சனம்

சீசன் 4ல் சனம்

இதனால் அவர்களின் காதல் விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் சனம் ஷெட்டி. பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதலே எல்லோரிடமும் வான்டட்டாக சென்று பேசுவது பெரியவர் போன்று நடந்து கொள்வது என உள்ளார்.

நடிக்கிறார் சனம்

நடிக்கிறார் சனம்

சிலரை முதல் முறையாக பார்த்த போதும் ஏற்கனவே பல ஆண்டுகள் பழகியவர் போல் நடந்து கொள்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சனம் ஷெட்டி நடிக்கிறார் என கருத்து கூறி வந்தனர். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஹார்ட் மற்றும் புரோக்கன் ஹார்ட் கொடுக்கும் டாஸ்க்கின் போது சக போட்டியாளர்களே அதனை கூறி விட்டனர்.

கவர் பண்ணுகிறார்

கவர் பண்ணுகிறார்

குறிப்பாக ஜித்தன் ரமேஷ், சனம் ஷெட்டி பழகும் முறையை கடுமையாக விமர்சித்தார். அதாவது பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததுமே வாங்க சாப்பிடுங்க என்றார்.. ரொம்ப பழகிய பர்சனை போன்று நடந்து கொண்டார். அதை பார்த்ததும், இந்த 14 நாளில் மொத்த பிக்பாஸ் சீசன்களையும் பார்த்துவிட்டு வந்திருப்பார் போல என்று எனக்கு தோன்றியது என புரோக்கன் ஹார்ட்டை கொடுத்தார்.

அதிக எஃபோர்ட்

அதிக எஃபோர்ட்

இதேபோல் கேப்ரில்லாவும் சனம் ஷெட்டி மற்றவர்களுடன் பழக அதிக எஃபோர்ட் போடுவதாக பகிரங்கமாக கூறினார். அவர் பழகுவது ஆத்மார்த்தமாக இல்லை என்றும் வீட்டில் சஸ்டைன் ஆக வேண்டும் என்பதற்காக அவர் இப்படி நடந்து கொள்வதாக தோன்றுவதாகவும் கூறினார்.

ஒரிஜினாலிட்டி

ஒரிஜினாலிட்டி

சமூக வலைதளங்களிலும் சனம் ஷெட்டி நடிப்பது போன்றே தோன்றுவதாக கூறி வருகின்றனர். இன்னும் சிலர் எத்தனை நாளைக்கு நடிக்க முடியும்? கேமரா இருப்பதை மறக்க தொடங்கிவிட்டால் ஒரிஜினாலிட்டி தானாக வெளிப்பட்டு விடும் என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X