வேறொரு காதலாம்... வளர்த்துவிட்ட காதலி, நடிகை சனம் ஷெட்டியை பிரிந்தார் பிக்பாஸ் தர்ஷன்?
Recommended Video
சென்னை: தனது காதலி சனம் ஷெட்டியை, பிக்பாஸ் தர்ஷன் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ் சீசன் 3' நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் இலங்கையை சேர்ந்த தர்ஷன். இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் அதிக இடம் பிடித்தார்.
பிக்பாஸில் இருந்து பாதியில் வெளியேறிய அவருக்கு கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

காதல் என்று பெயர்
இதுபுறம் இருக்க, தமிழகத்தில் அறிமுகம் இல்லாத தர்ஷனை, தனது சொந்த முயற்சியால் பிக்பாஸ் வரை கொண்டு சென்றவர் நடிகை சனம் ஷெட்டி என்கிறார்கள். இவர் தமிழில் அம்புலி, மாயாவி, கதம் கதம் உட்பட சில படங்களில் நடித்த கன்னட நடிகை. சனம் ஏன் அதைச் செய்தார்? அதற்கு காதல் என்று பெயர்!

கோலிவுட்
இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தனது காதலனின் முன்னேற்றத்துக்காக, சனம் எடுத்த முயற்சியால்தான் தர்ஷன் பிக்பாஸ் வீட்டுக்குச் சென்றார் என்பது கோலிவுட் சொல்லும் செய்தி.

பிடிகொடுக்கவில்லை
இவர்கள் காதலிக்கிறார்கள் என்பது தெரிந்தும் பிக்பாஸ் வீட்டில் நடிகை ஷெரின், தர்சனை காதலிக்கத் தொடங்கினார். அவர் பிடிகொடுக்கவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் வெளியேற இருப்பதாகவும் அதற்கு தனது காதல் பற்றி சனம் பேசிக்கொண்டிருப்பதுதான் காரணம் என்றும் தகவல் வந்தது.

கண்ணீர் பேட்டி
அப்போது கண்ணீர் மல்க, வீடியோ பைட் ஒன்றைக் கொடுத்தார் சனம். அதில், 'என்னால்தான் தர்ஷனுக்கு சிக்கல் என்றால், இனி அவரிடமிருந்து விலகி விடுகிறேன். ஆனாலும் அவரை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன். அது எப்போதும் தொடரும்' என்று அழுதபடி தெரிவித்திருந்தார்.

ராஜாவுக்கு செக்
ஆனால், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் காதலர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்கள். இருவரும் சேரனின் 'ராஜாவுக்கு செக்' பட ஷோவுக்கு ஒன்றாகச் சென்று வந்தனர். இந்நிலையில், கமல் பட நிறுவனத்தில் நடிக்க வாய்ப்பு என்றதும் தர்ஷனின் சினிமா தொடர்புகள் எல்லை கடந்தன.

புதுபுது அறிமுகம்
தினம் ஒரு பார்ட்டி, தினம் புது நட்பு என்று தர்ஷனின் சினிமா வாழ்க்கை விரிந்தது. இதில் புதிய அறிமுகங்களால் மகிழ்ந்த தர்ஷன், சனம் ஷெட்டியின் காதலை அப்படியே உதறிவிட்டு, வேறொரு காதலில் விழுந்துவிட்டார் என்கிறார்கள்.

முதல் அரிச்சுவடி
வளர்த்துவிட்ட ஏணியை, வளர்ந்த பின் தூக்கி எறிவதுதான் சினிமாவின் முதல் அரிச்சுவடி என்பார்கள் கோடம்பாக்கத்தில். அதைத்தான் தர்ஷனும் செய்திருக்கிறார் என்றும் நடிகை சனம் ஷெட்டி காதல் முறிந்த சோகத்தில் இருப்பதாகவும் பேச்சாகக் கிடக்கிறது சினிமா வட்டாரத்தில்.


Click it and Unblock the Notifications











