»   »  ஷூட்டிங்ஸ்பாட்டில் ஓவராக சீன் போடுகிறாரா வாரிசு நடிகை?

ஷூட்டிங்ஸ்பாட்டில் ஓவராக சீன் போடுகிறாரா வாரிசு நடிகை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானின் மகள் சாரா படப்பிடிப்பு தளத்தில் ஓவர் சீன் போடுவதாக வெளியான தகவல் குறித்து தயாரிப்பாளர் அர்ஜுன் என். கபூர் விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானின் மகள் சாரா கேதர்நாத் படம் மூலம் நடிகையாகியுள்ளார். கேதர்நாத் படத்தில் அவர் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜோடியாக நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு தளத்தில் சாரா ஓவர் சீன் போடுவதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ஜுன் என். கபூர் கூறியிருப்பதாவது,

சாரா

சாரா

சாரா ஓவர் சீன் போடும் ஆள் இல்லை. அவரை பற்றி யாரோ தவறான தகவலை பரப்பியுள்ளனர். சாரா 100 சதவீத ஈடுபாட்டுடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.

முதல் நாள்

முதல் நாள்

படப்பிடிப்பு துவங்கிய முதல் நாள், முதல் நாள் போன்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு சாராவும், சுஷாந்த்தும் ஒத்திகை எடுத்துள்ளனர். சாரா காட்சிகளை உடனே புரிந்து கொண்டு நடிக்கிறார்.

ஒரே டேக்

ஒரே டேக்

சாரா ஒரே டேக்கில் காட்சிகளில் நடிக்கிறார். முதல் படத்தில் நடித்தாலும் சாரா கேமரா முன்பு சவுகரியமாக நடிக்கிறார். அவர் கூட்டத்தை பார்த்து பயப்படுவது இல்லை.

திறமை

திறமை

சாரா அலி கான் திறமையானவர். சினிமா துறையை பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார். அதே சமயம் கடினமாக உழைக்க தயங்காதவர். ஏற்கனவே அவர் படக்குழுவின் செல்லப் பிள்ளையாகிவிட்டார் என்றார் அர்ஜுன்.

English summary
Kedarnath producer Arjun N Kapoor said that Sara Ali Khan is not throwing tantrums on the sets of her debut movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil