என்னது, சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்கு போகிறாரா?

By Siva

Recommended Video

BIGG BOSS 3 TAMIL | லாஸ்லியாக்கூட சண்டை போட்டா சதீஷ்க்கு ஏன் வலிக்குது?

சென்னை: பிக் பாஸ் என்ட்ரியா என்று கேட்ட கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு நடிகர் சதீஷ் சுவாரஸ்யமான பதில் அளித்துள்ளார்.

கோலிவுட்டின் பிசியான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக உள்ளவர் சதீஷ். அவர் ஒவ்வொரு சீசனும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து ட்விட்டரில் கமெண்ட் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார்.

சதீஷ்

சதீஷ் ஸ்டைலாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் நன்றாக வந்ததும் அதை ரசிகர்களிடம் காட்ட ட்விட்டரில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தை பார்த்த கிரிக்கெட் வீரர் அஸ்வினோ, என்ன பிக் பாஸ் என்ட்ரியா என்று கேட்டார். (சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றால் பாவம், ரொம்ப கஷ்டப்படுவார்.)

சதீஷானந்தா

அஸ்வின் கேட்ட கேள்வியை பார்த்த சதீஷ் தான் சாமியார் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஆசிரமம் ஆரம்பிக்கப் போகிறேன் ப்ரோ என்று தெரிவித்துள்ளார். அவர் யாரை போன்று வேஷமிட்டுள்ளார் என்பது பார்த்த உடனேயே அனைவருக்கும் புரிந்துவிட்டது.

பொண்ணு

பொண்ணு

சதீஷின் ஸ்டைலான புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ, என்ன ப்ரோ பொண்ணு வீட்டில் போட்டோ கேட்டாங்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சிலரோ, நீங்களும் விதம், விதமாக புகைப்படம் வெளியிடுகிறீர்கள். ஆனால் ஒன்றும் நடப்பதாக இல்லையே என்று கலாய்த்துள்ளனர். சதீஷ் இன்னும் மொரட்டு சிங்கிளாக இருப்பதை பற்றி தான் கலாய்க்கிறார்கள் ரசிகர்கள்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

என்ன சதீஷ், பிக் பாஸ் வீட்டிற்கு போகிறீர்களா, வீட்டில் சொல்லிட்டீங்களா என்று நெட்டிசன்கள் தங்கள் பங்கிற்கு கலாய்த்துள்ளனர். பிக் பாஸ் வீட்டிற்கு போகாதீங்க சதீஷ். வனிதா அக்கா இருக்கிறார்கள், பிரச்சனையாகிவிடும் என்று சிலர் எச்சரித்துள்ளனர். வனிதா மீண்டும் வந்த பிறகு பிக் பாஸ் வீட்டில் தினமும் பிரச்சனையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X