சதீஷுக்கு ஹீரோ ஆசை வந்துடுச்சா?: பின்ன ஏன் அப்படி ட்வீட் போட்டார்?

By Siva

சென்னை: நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து அவருக்கு ஹீரோ ஆசை வந்துவிட்டது என்று சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள்.

நகைச்சுவை நடிகர் சதீஷ் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கினாலே படுபிசியாகிவிடுகிறார். நிகழ்ச்சியை பார்த்து தனது கருத்துகளை ட்விட்டரில் வெளியிடுவார். சந்தானம் இல்லாத குறையை தீர்க்க மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்த நாலு காமெடியன்களில் ஒருவர் சதீஷ்.

Is Sathish trying to be a hero?

அந்த படத்தில் அவரின் காமெடி ஒர்க்அவுட் ஆகவில்லை. நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் சதீஷ் ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்தால் மனிதர் ஜிம்முக்கு செல்கிறார் என்று தெரிகிறது.

ஒரு நடிகர் அதுவும் நகைச்சுவை நடிகர் ஜிம்முக்கு சென்றால் ஒன்று தனது பாடியை படத்தில் காட்டப் போகிறார் இல்லை என்றால் ஹீரோ ஆசை வந்துவிட்டது என்று அர்த்தம். இந்நிலையில் சதீஷின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்களோ, என்ன ப்ரோ ஹீரோவாக நடிக்கப் போகிறீர்களா?. சான்ஸ் கேட்டுத் தான் இந்த புகைப்படமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிலரோ, இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவாகிட்டாலும் என்று நக்கலாக கமெண்ட் போட்டுள்ளனர். இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா என்று மட்டும் கூறாதீர்கள் மக்களே. அப்படி விமர்சனத்திற்குள்ளான விஜய், தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோரின் இன்றையே நிலையே வேறு. யாராக இருந்தாலும் திறமை தான் முக்கியம், அழகு இல்லை.

ஹீரோவுக்கு அழகு வேண்டாமா என்று கேட்கலாம். எந்த காலத்தில் வாழ்கிறீர்கள்?. தொழில்நுட்பம் மட்டும் அல்ல மேக்கப் சாதனங்களும் அதீத வளர்ச்சி கண்டுள்ளது. அதனால் அழகை செயற்கையாக வரவழைக்கலாம். மேலும் நன்றாக நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

எனவே, சதீஷுக்கு ஹீரோ ஆசை வந்தாலும் அது தப்பு இல்லை. அவர் ஆசைக்கு நடித்துவிட்டு போகட்டுமே. நம்ம சந்தானம், யோகிபாபு ஆகிய நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் ஹீரோ ஆகவில்லையா?

இப்படித்தான் வேறு ஒரு பிரபலமும் ஹீரோ ஆசையில் உடல் எடையை வெகுவாக குறைத்தார். ஆனால் அது உங்களுக்கு சரிபட்டு வராது என்று கோலிவுட் பிரபலங்கள் அறிவுரை வழங்கியதால் ஹீரோ ஆசையை மூட்டைக் கட்டி ஒரு ஓரமாக வைத்துவிட்டு தனக்கு எது வருமோ அதை மட்டும் செய்து கொண்டு கைதட்டல் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X