என்.ஜி.கே. ட்ரெய்லரில் அரசியலுக்கு வரத் துடிக்கும் நடிகர்களை கலாய்க்கிறார்களா?
Recommended Video
சென்னை: என்.ஜி.கே. ட்ரெய்லரில் வரும் முதல் வசனம் அரசியலுக்கு வரத் துடிக்கும் நடிகர்களை நினைவூட்டுகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள என்.ஜி.கே. படம் வரும் மே மாதம் 31ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரெய்லரில் எடுத்த எடுப்பிலேயே இளவரசு சூர்யாவை பார்த்து,' நீ கொஞ்சம் கூட்டத்தோட அரசியலில் சேர்ந்துட்டா நேரா உள்ள விட்டுவாங்கன்னு நினைச்சியா' என்று கேட்கிறார். அப்படி என்றால் விட மாட்டாங்களா பாஸ்?
இந்த வசனத்தை பார்த்தால் அரசியலுக்கு வந்த மற்றும் வரத் துடிக்கும் நடிகர்கள் நினைவுக்கு வருகிறார்கள். தானா சேர்ந்த கூட்டத்தை நம்பி அரசியலுக்கு வரும் நடிகர்களை செல்வராகவனா கலாய்த்திருப்பது என்ற வியப்பும் ஏற்படுகிறது.
அந்த வியப்பிற்கான காரணம் உங்களுக்கே தெரியும். ட்ரெய்லர் மாஸாக உள்ளது. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என்று நொந்து போயிருந்த சூர்யா ரசிகர்களுக்கு இந்த ட்ரெய்லர் செம ட்ரீட்.
அவர்களுக்கு ட்ரெய்லர் மிகவும் பிடித்துள்ளது. அது தானே வேண்டும்.


Click it and Unblock the Notifications











