எவன் கெளப்பி விடுறான்னே தெரியலையே, கையில கெடச்சான்: கடுப்பில் பிகில் குழு

By Siva

சென்னை: விஜய்யின் பிகில் படத்தில் ஷாருக்கான் கவுரவத் தோற்றத்தில் வருவதாக வெளியான தகவல் குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பதாக முன்பு கூறப்பட்டது. ஷாருக்கான் அட்லியை சந்தித்து பேசியதால் இந்த பேச்சு கிளம்பி பின்னர் அடங்கியது.

Is Shah Rukh Khan acting in Bigil?

இந்நிலையில் பிகில் படத்தில் ஷாருக்கான் கவுரவத் தோற்றத்தில் வந்து விஜய்யுடன் டான்ஸ் ஆடுகிறார் என்ற தகவல் தீயாக பரவியது. மேலும் ஷாருக்கான் தான் விஜய்யின் முக்கிய வில்லன், அவர் பிகில் படத்தில் 15 நிமிடங்கள் வந்தாலும் அவரின் கதாபாத்திரம் வெயிட்டாக இருக்கும் என்றும் தகவல் வெளியானது.

படத்தில் விஜய்யும், ஷாருக்கானும் பயங்கரமாக மோதிக் கொள்ளும் காட்சி இருப்பதாக எல்லாம் கூறப்பட்டது. இந்நிலையில் படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் ஆங்கில பத்திரிகையிடம் விளக்கம் அளித்துள்ளார்.

Is Shah Rukh Khan acting in Bigil?

பிகில் படத்தில் ஷாருக்கான் நடிப்பது பற்றி அவர் கூறியதாவது,

ஷாருக்கான் பிகில் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்கவில்லை. இது வெறும் வதந்தியே. யார் தான் இது போன்ற வதந்திகளை கிளப்பிவிடுகிறார்கள் என்றே தெரியவில்லை என்றார்.

முன்னதாக பிகில் பட கதை குறித்து தெரிந்த பிறகு அட்லி எந்த படத்தை பார்த்து இன்ஸ்பையர் ஆகி இந்த படத்தை எடுக்கிறார் என்று கண்டுபிடித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பேசினார்கள். படம் பற்றிய தகவல் வெளியாவதை விட வதந்திகள் அதிக அளவில் பரவிக் கொண்டிருக்கிறது.

யார் வேண்டுமானாலும் வதந்தியை பரப்பட்டும் நான் என் வேலையை மட்டும் பார்க்கிறேன் என்று உள்ளார் அட்லி. விஜய் எப்பொழுதுமே தான் உண்டு, தன் நடிப்பு உண்டு என்று இருப்பவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

பிகில் படத்தில் ரோபோ ஷங்கரின் மகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை தேவதர்ஷினியின் மகளை நடிக்க வைக்க அணுகினார்கள். ஆனால் அவர் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் அவரின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் மாறுபட்ட வேடங்களில் நடித்து வரும் பிகில் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தை கொண்டாட விஜய் ரசிகர்கள் மரண வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X