மீண்டும் சாக்‌ஷி.. கையில் கோப்பையுடன் தோழி.. பிக் பாஸில் கிடைத்த பேரை கெடுத்துக் கொண்ட ஷெரின்!

Recommended Video

பிக் பாஸில் கிடைத்த பேரை கெடுத்துக் கொண்ட ஷெரின்!-வீடியோ

சென்னை: சாக்‌ஷியுடன் ஷெரின் இருக்கும் வீடியோவைப் பார்த்து ஷெரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் பாய்ஸ் கேங் இருந்ததைப் போன்று, ஷெரின், சாக்‌ஷி மற்றும் அபிராமி ஆகியோர் சேர்ந்து ஆரம்பத்தில் பெண்கள் அணி ஒன்று இருந்தது. எந்த சண்டை நடந்தாலும், தங்களுக்குள் ஒற்றுமையாக புகை பிடிக்கச் செல்வது, தங்களது மன காயங்களை பரிமாறிக் கொள்வது, ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொள்வது என அவர்கள் ஒற்றுமையாக இருந்தனர்.

ஆனால், முகெனுடன் உண்டான நட்பால் இந்த அணியில் இருந்து முதலில் அபி வெளியேறினார். பின்னர் அவர் லாஸ்லியாவோடு நெருக்கமானார். கடைசி வரை அவர்களது நட்பு நீடித்தது.

காதல் சர்ச்சை

காதல் சர்ச்சை

இதற்கிடையே, சாக்‌ஷி கவினுடனும், ஷெரின் தர்ஷனுடனும் காதல் சர்ச்சையில் சிக்கினர். இந்தப் பிரச்சினையில் ஒருவருக்கொருவர் ஆதரவாக செயல்பட்டனர். சாக்‌ஷியின் வெளியேற்றத்தால் ஷெரின் தான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார்.

சாக்‌ஷியின் விருப்பம்

சாக்‌ஷியின் விருப்பம்

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த போது கூட, ஷெரினை வெற்றியாளர் ஆக்க வேண்டும் என்று தான் சாக்‌ஷி ஆசைப்பட்டார். வனிதா ஏற்படுத்திய பிரச்சினைகளின் போதும் அவர் ஷெரினுக்கு அனுசரனையாகவே நடந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் சாக்‌ஷி மட்டுமின்றி அனைவரிடமும் நல்ல பெயரையே ஷெரின் பெற்றிருந்தார்.

வீடியோ

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பாய்ஸ் கேங் சாண்டி வீட்டில் விருந்து சாப்பிட்டது போல, ஷெரின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துள்ளார் சாக்‌ஷி. அங்கு அவர் மசாலா டீ போடும் வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக ஷெரின், அவரது தோழி மற்றும் சாக்‌ஷி ஆகியோர் வெளியே அவுட்டிங் சென்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ரசிகர்கள் அறிவுரை

ரசிகர்கள் அறிவுரை

அதில் ஷெரினின் தோழி கையில் கோப்பை ஒன்றுடன் காணப்படுகிறார். அதைப் பார்த்து விட்டு அவர்கள் மூவரும் மது போதையில் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த நல்ல பெயரை மீண்டும் சாக்‌ஷியுடன் சேர்ந்து கெடுத்துக் கொள்ளாதீர்கள் என ஷெரினுக்கு அவரது ரசிகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

யாஷ் - ஐஸ் மாதிரி

யாஷ் - ஐஸ் மாதிரி

போன சீசனில் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் இதே மாதிரி தான் நெருங்கிய தோழிகளாக இருந்தனர். தற்போது வரை அவர்களது நட்பு தொடர்கிறது. ஆனால், மது குடித்து விட்டு செய்த அட்டகாசங்கள் அவர்களது பெயரை கெடுத்தது. தற்போதும் அதேபோல் நட்பு என்ற பெயரில் ஷெரினும், சாக்‌ஷியும் மேலும் பேரைக் கெடுத்துக் கொள்வார்களோ என்பது தான் அவர்களது ரசிகர்களின் பெரிய கவலையே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X