ட்விஸ்டு மேல டிவிஸ்ட்... ஷங்கர் இயக்கப் போவது ரஜினியையா அஜீத்தையா?
பிரபலம்னாலே பிராப்ளம்தான்... எப்பவும் ஏதாவது அவரைப் பற்றி செய்தி, குறிப்பாக உறுதிப்படுத்தாத செய்தி வந்துகொண்டே இருக்கும்.
சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் ஷங்கர் ஆகிய இருவர் பற்றித்தான் மிக அதிக அளவு உறுதிப்படுத்தாத அல்லது உறுதிப்படுத்த முடியாத செய்திகள் வருவது வழக்கம்.

ரஜினி - ஷங்கர்
அப்படி சமீபத்தில் கிளம்பிய செய்தி... ஷங்கர் தன் ஐ படத்தை முடித்ததும் சூப்பர் ஸ்டாரை இயக்குகிறார் என்பது. இதுகுறித்து பல தரப்பிலும் விசாரித்த போது, ரஜினி - ஷங்கர் சந்திப்பு குறித்தும், இருவரும் கதை விவாதம் செய்ததும் உண்மையே என்று பதில் கிடைத்தன.

இப்போ ஷங்கர் - அஜீத்
இப்போது அதில் ஒரு ட்விஸ்ட். அதில்தான் நம்மாளுங்க கில்லாடிகளாச்சே.. அந்த ட்விஸ்ட்படி, அடுத்து ஷங்கர் இயக்கப் போவது அஜீத்தையாம்.

ஏன் இப்படி?
வேற ஒண்ணுமில்ல... ஷங்கர் தனக்கு சொன்ன கதை அஜீத்துக்கு பொருத்தமா இருக்கும்னு ரஜினியே ரெகமண்ட் பண்ணிட்டாராம். அதனால் அஜீத்தை அடுத்து இயக்குகிறார் ஷங்கர்-னு செய்திகள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன.

அட.. உண்மையைச் சொல்லுங்கப்பா
இதையும் விசாரிக்கணுமில்ல... விசாரிச்சா வர்ற தகவல் வேறயா இருக்கு. ரஜினி இந்தக் கதைக்காக தயாராகிக் கொண்டிருக்கிறாராம். பொதுவாக ஒரு படம் முடிந்ததும் வெளிநாட்டுக்குக் டூர் கிளம்பும் ஷங்கர், இந்த முறை குடும்ப டூரை கேன்சல் பண்ணிட்டு ரஜினியுடன் லொகேஷன் பார்க்கக் கிளம்புவார்னு சொல்றாங்க.

இன்னும் வரும்
ஆனா.. கடைசி வரைக்கும் இதுக்கெல்லாம் பதிலே வராது ரஜினி - ஷங்கரிடமிருந்து என்பது மீடியாக்காரர்களுக்கும் நன்கு தெரியும். எனவே இன்னும் கூட சில ட்விஸ்டுகள் வரும்.. எதிர்பாருங்கள்!


Click it and Unblock the Notifications











