அவருக்கு ரெகமண்ட் பண்ணிய அனிருத்.. விஜய்யை இயக்குகிறார் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்? அப்ப இந்தியன் 2?

By

சென்னை: நடிகர் விஜய்யை இயக்குனர் ஷங்கர் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இதில் மாளவிகா மோகனன் ஹீரோயின்.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

அனிருத் இசை அமைத்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளி போனது. இந்நிலையில் இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

திருப்தி இல்லையாம்

திருப்தி இல்லையாம்

இந்தப் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது. இதை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருந்தார். இதற்கான கதை விவாதத்தில் அவர் ஈடுபட்டிருந்தார். இரண்டு முறை கதையை மாற்றியும் விஜய்க்கு கதையில் திருப்தி இல்லையாம்.

நெல்சன்

நெல்சன்

இதனால் இயக்குனர் முருகதாஸ், விஜய் படத்தில் இருந்து விலகியுள்ளார். அடுத்து விஜய்யை இயக்குவது யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது. நயன்தாரா, யோகிபாபு நடித்த 'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கியவர் நெல்சன்.

அனிருத் சிபாரிசு

அனிருத் சிபாரிசு

இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்கி வருகிறார். முன்னதாக சிம்புவின் வேட்டை மன்னன் படத்தை இயக்கினார். அந்த படம் பாதியில் நின்றுவிட்டது. நெல்சன், விஜய்யிடம் கதை சொல்ல இசை அமைப்பாளர் அனிருத், சிபாரிசு செய்துள்ளார். நெல்சனிடம் விஜய் கதையை கேட்டுவிட்டார்.

ஷங்கர் முயற்சி

ஷங்கர் முயற்சி

இதற்கிடையே, இந்தியன் 2 படம் எப்போது தொடங்கும் என்று தெரியாத நிலை இருக்கிறது. அதுபற்றி தயாரிப்பு தரப்பு எதுவும் தெரிவிக்காத நிலையில், நடிகர் விஜய்யை இயக்க இயக்குனர் ஷங்கரும் முயற்சிப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இருவரும் ஏற்கனவே, நண்பன் படத்தில் இணைந்திருந்தனர். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

இயக்குனர் யார்

இயக்குனர் யார்

ஷங்கர், விஜய் காம்பினேசன் என்றால், படம் வேற லெவலில் இருக்கும் என்பதால் அதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் விஜய்யின் அடுத்தப் பட இயக்குனர் யார் என்பது உறுதியாகிவிடும் என்கிறார்கள் அவருக்கு வேண்டியவர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X