ஷங்கர் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் விஜய் மகன்?

நடிகர் விஜய்யின் மகன் ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

விஜய் மகனை நாயகனாக்கிய ஷங்கர் Director Shankar will be directing actor Vijay's son Sanjay soon.

சென்னை: விஜய் மகனை நாயகனாக்கி இயக்குநர் ஷங்கர் புதிய படமொன்றை இயக்க இருப்பதாக இணையத்தில் வதந்தி ஒன்று பரவி வருகிறது.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு தனது தாத்தா, அப்பாவைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக படித்து வருகிறார்.

நீண்ட நாட்களாக அவர் நாயகனாகத் தான் சினிமாவில் அறிமுகமாவார் என்ற பேச்சு உள்ளது. ஆனால் யாரும் எதிர்பார்க்கா வண்ணம், ஜங்ஷன், சிரி போன்ற குறும்படங்களை இயக்கி, நடித்திருந்தார் சஞ்சய். இந்தக் குறும்படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

நடிகர் விஜயை இன்னும் இள வயதில் பார்த்தது போன்ற தோற்றத்தில் இருப்பதாக சஞ்சயை விஜய் ரசிகர்கள் பாராட்டினர். வேட்டைக்காரன் படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு சஞ்சய் நடனமாடியிருந்தார்.

 விஜய் மகன் சஞ்சய்

விஜய் மகன் சஞ்சய்

இந்நிலையில், விஜய் மகன் புதிய தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதுவும், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில். ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் விஜய் நண்பன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பும்படி இல்லையே

நம்பும்படி இல்லையே

ஆனால் நிச்சயம் இந்தச் செய்தி நம்பும்படி இல்லை. காரணம், ஷங்கர் தற்போது கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். தனது படங்களில் எல்லாமே பிரம்மாண்டத்திற்கும், கிராபிக்ஸுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் ஷங்கர். எனவே, நிச்சயம் இப்படத்தின் வேலைகள் முடிய சில ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைரலாகும் தகவல்

வைரலாகும் தகவல்

அப்படி இருக்கையில் ஷங்கர் இடையில் புதிய பட வேலைகளை ஆரம்பிப்பது என்பது நம்பும் படியாக இல்லை. ஆனாலும் இத்தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. விஜய் தரப்போ, அல்லது சங்கர் தரப்போ இதுதொடர்பாக விளக்கம் அளித்தால் மட்டுமே இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

சூர்யா மகன் தேவ்

சூர்யா மகன் தேவ்

இப்படி தான் சமீபத்தில் சூர்யா மகன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் அது உண்மையல்ல என்று சூர்யா தரப்பினர் உடனடியாக விளக்கம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X