Babloo - பப்லுவுடன் மீண்டும் இணைந்துவிட்டாரா ஷீத்தல்?.. பார்ட்டியில் பண்ண வேலையை பாருங்க
சென்னை: பப்லு என்கிற பிருத்விராஜ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருந்தார். இந்த சூழலில் அவர் கடைசியாக அனிமல் படத்தில் நடித்திருந்தார். படம் மெகா ஹிட்டாகியிருப்பதாக கூறி படக்குழு சார்பில் பார்ட்டி ஒன்று வைக்கப்பட்டது.
நான்கு சுவர்கள் படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பப்லு பிருத்விராஜ். அந்தப் படத்துக்கு பிறகு சிறு வயதிலேயே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன் என பல ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார் பிருத்விராஜ்.

சினிமா ஆசை: பப்லுவுக்கு சினிமா ஆசை இருந்ததற்கு முன்பே அவரது தந்தைக்கு சினிமா ஆசை இருந்தது. இன்னும் சொல்லப்போனால் காதலிக்க நேரமில்லை படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது அவர்தான். ஆனால் அவரது கண்ணில் ஒரு குறைபாடு இருந்ததால் அதிலிருந்து நீக்கப்பட்டார். இதை மிகப்பெரும் அசிங்கமாக உணர்ந்த அவரது தந்தை பிறகு போக்குவரத்து காவல் துறையில் உதவி ஆய்வாளராக மாறிவிட்டார் . தன்னை அசிங்கப்படுத்திய சினிமாவுக்குள் மகனை கொண்டு வந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து எப்படியோ பப்லுவை உள்ளே கொண்டு வந்துவிட்டார்.
முன்னணி நடிகர்: குழந்தை நட்சத்திரமாக இருந்த பப்லு வளர்ந்த பிறகும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி அவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகின. பாண்டிநாட்டு தங்கம், சிகரம், அழகன் என தொடர்ந்து பல படங்களில் நடித்தார். முக்கியமாக 90களில் ஃபேமஸான நடிகராக வலம் வந்தார் அவர். சூழல் இப்படி இருக்க பீனா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
விவாகரத்து; லிவிங் டூ கெதர்: பீனாவுக்கும் பப்லுவுக்கும் ஒரு மகன் இருக்கிறார். அவருக்கு ஆட்டிஸம் குறைபாடு இருக்கிறது. இருந்தாலும் இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பீனாவை பிரிந்த அவர் ஷீத்தல் என்பவருடன் லிவிங் டூ கெதரில் இருந்தார். ஆனால் அந்த ரிலேஷன்ஷிப்பும் முடிந்துவிட்டதாக சமீபகாலமாகே பேசப்பட்டது. இதனால் சில வாரங்கள் அவர் டாக் ஆஃப் தி டவுனாக இருந்தார்.
அனிமல்: பிருத்விராஜ் சமீபத்தில் வெளியான அனிமல் படத்தில் நடித்தார். படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இருந்தாலும் பப்லுவின் நடிப்புக்கு ரசிகர்கள் தங்களது வரவேற்பை கொடுத்தனர். அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் நடித்துவருகிறார். மேலும் சில படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்துவருகிறார் அவர். இப்படி மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருப்பதால் பப்லுவுக்கு இது இரண்டாவது இன்னிங்ஸ் என்றே கருதப்படுகிறது. இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் திட்டத்திலும் அவர் இருக்கிறார்.
இணைந்த ஷூத்தல்: இந்நிலையில் பப்லு - ஷீத்தல் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது அனிமல் படம் மெகா ஹிட்டாகிவிட்டதாக கூறி படக்குழு சார்பில் பிரமாண்ட பார்ட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதில் படத்தில் பணியாற்றியவர்கள் கலந்துகொண்டார்கள். அந்தவகையில் பப்லுவும் இதில் கலந்துகொண்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பப்லுவுடன் ஷீத்தலும் அந்தப் பார்ட்டிக்கு வந்ததுதான். ராஷ்மிகா மந்தனா, பப்லு, ஷீத்தல் ஆகிய மூன்று பேரும் ஒன்றாக செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பப்லுவும், ஷீத்தலும் மீண்டும் இணைந்துவிட்டார்கள் என்பதைத்தான் இந்தப் படம் உணர்த்துகிறது என கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











