twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னது... சிம்புவின் கொரோனா குமார் கைவிடப்பட்டதா... இது தான் காரணமா ?

    |

    சென்னை : வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களை முடித்த பிறகு சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்பட்ட கொரோனா குமார் படம் பாதியில் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காகவா அத்தனை அப்டேட் வெளியிட்டார்கள். எதற்காக படத்தை ஆரம்பிக்கும் முன்பே கை விட்டார்கள் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

    மாநாடு படம் 100 நாட்களை கடந்து பிளாக் பஸ்டர் படமாக பிரம்மாண்ட வெற்றி அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து சிம்பு வரிசையாக 3 படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சிம்பு தற்போது கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இறுதிக்கட்ட ஸ்டன்ட் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

    ஆஹா...செம மேட்டரா இருக்கே...இதுதான் சிம்புவின் கொரோனா குமார் கதையா? ஆஹா...செம மேட்டரா இருக்கே...இதுதான் சிம்புவின் கொரோனா குமார் கதையா?

    கொரோனா குமார் அப்டேட்

    கொரோனா குமார் அப்டேட்

    இதைத் தொடர்ந்து பத்து தல படத்தில் நடிக்கிறார் சிம்பு. வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தலா 25 கோடி சம்பளத்தில் சிம்புவுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா குமார் படத்தை டைரக்டர் கோகுல் இயக்க உள்ளதாகவும், இதில் சிம்புவிற்கு ஜோடியாக டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமாக தயாராக உள்ள இந்த படத்தில் ஃபகத் ஃபாசில் வில்லனாக நடிக்க போகிறார் என கூறப்பட்டது.

    என்னது கொரோனா குமார் இல்லையா

    என்னது கொரோனா குமார் இல்லையா

    ஆனால் கொரோனா குமார் படம் திடீரென கை விடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு தனது சம்பளத்தை 25 கோடியில் இருந்து 30 கோடியாக உயர்த்தி உள்ளாராம். தற்போது கமிட்டாகி உள்ள 3 படங்களுக்கும் தலா 30 கோடி வீதம் சம்பளம் தர வேண்டும் கேட்டு வருகிறாராம் சிம்பு. இதனால் படத்தின் பட்ஜெட் அதிகரிக்கும் என்பதால் தயாரிப்பு நிறுவனம் தயக்கம் காட்டுகிறதாம். இதனால் கொரோனா குமார் படத்தை கைவிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

    அதிர்ச்சியில் ரசிகர்கள்

    அதிர்ச்சியில் ரசிகர்கள்

    வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களை முடித்த பிறகு கொரோனா குமார் படத்தை சிம்பு துவக்குவார் என கூறினார்கள். முந்தைய படங்களை போல் இல்லாமல் சிம்பு முதல் முறையாக முழு நீள காமெடி படமாக கொரோனா குமார் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்கிடையில் கமலுக்கு பதில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க சென்று விட்டார் சிம்பு. தற்போது சம்பள விவகாரத்தால் கொரானா குமார் படத்தை கைவிடும் நிலைக்கு தயாரிப்பு நிறுவனம் வந்துள்ளதாக கூறப்படுவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    வரிசை கட்டும் வாய்ப்புகள்

    வரிசை கட்டும் வாய்ப்புகள்

    இதற்கிடையில் இன்னும் சில படங்களில் நடிக்க சிம்புவிடம் பேசப்பட்டு வருகிறதாம். பிக்பாஸ் அல்டிமேட் உடன் தற்போது நடிக்கும் படங்களின் வேலைகளை முடித்து விட்டு, பிறகு புதிய படங்களில் நடிக்க சிம்பு தயாராவார் என கூறப்படுகிறது.

    English summary
    According to sources, Simbu's Corona Kumar movie was dropped. After Maanaadu Vel's films, International booked Simbu for 3 films with a 25 crore salary for each. But after Maanaadu, Simbu hiked his salary from 25 crore to 30 crore. So the production house hesitates to continue this project.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X