சிம்புவின் மாநாடு கைவிடப்பட்டதா.... தயாரிப்பாளர் விளக்கம்!

சிம்புவின் மாநாடு திரைப்படம் கைவிடப்படவில்லை என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

சென்னை: சிம்புவின் மாநாடு படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவலை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மறுத்துள்ளார்.

வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திற்கு பிறகு சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். மாநாடு என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

Is Simbus Maanadu dropped? Produced Suresh Kamatchi explains

இப்படத்தின் படப்பிடிப்பு சிம்புவின் பிறந்தநாளான 3ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதன் பிறகு விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென சிம்பு லண்டன் கிளம்பி சென்றுவிட்டார். இதனால் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது.

ஆனால் இதனை படக்குழு மறுத்துள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ள படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, "படம் கைவிடப்பட்டதாக வதந்திதகளை பரப்ப வேண்டாம். படப்பிடிப்பை தொடங்குவது என்பது சாதாரணமானது அல்ல. மாநாடு படம் திட்டமிட்டபடி எடுக்கப்படும். படத்திற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்" என தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளரின் இந்த பதிவு மூலம், மாநாடு படம் கைவிடப்பட்டதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X