வெந்து தணிந்தது காடு படத்தின் சூட்டிங் இன்னமும் நடக்குதா? தீயாய் பரவும் தகவல்.. நம்பலாமா?
சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் விரைவில் திரைக்கு வருகிறது.
Recommended Video
இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன.
அதற்கு அப்படியொரு காரணமும் உள்ளதாக சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட கதைகள் உலா வருகின்றன.

அடுத்த மாதம் ரிலீஸ்
கெளதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சிம்பு, சித்தி இத்னானி நடிப்பில் உருவாகி உள்ள வெந்து தணிந்தது காடு வரும் செப்டம்பர் 15ம் தேதி திரைக்கு வருகிறது. விரைவில் இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் வரும் செப்டம்பர் 2ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சூட்டிங்
இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் கொல்கத்தாவில் தொடங்கி உள்ளதாக புதிய தகவல்கள் காட்டுத் தீ போல பரவி வருகின்றன. மேலும், அதற்காக சொல்லப்படும் காரணம் தான் சிம்பு ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுள்ளது. அடுத்த மாதம் பட ரிலீஸ் உள்ள நிலையில், மீண்டும் ஏன் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் என்கிற கேள்விக்கு என்ன விளக்கம் கொடுத்துள்ளனர் தெரியுமா?

பார்ட் 2 வருதாம்
இது பார்ட் 2 சீசன் என்பது போல வரிசையாக பல படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகி வருகின்றன. சில பெரிய படங்கள் இரண்டு பாகங்களாக உடைக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகின்றன. வெந்து தணிந்தது காடு படமும் இரண்டு பாகங்களாக வெளியாக போவதாகவும் அதற்கான படப்பிடிப்பு தான் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நம்பலாமா
ஆனால், இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. பத்து தல படத்தின் சூட்டிங்கை தான் செய்கிறேன் என சிம்புவும் அந்த கெட்டப்புக்கு மாறி போட்டோக்களை வெளியிட்டு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். ஆனால், தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் 2ம் பாகத்துக்கான படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை வெயிட் பண்ணுவோம்.


Click it and Unblock the Notifications











