2015ல் ஹரியுடன் இணையும் சூர்யா: சிங்கம் – 3 ரெடி?

By Mayura Akilan

2015ம் ஆண்டு மீண்டும் இயக்குநர் ஹரி இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

'ஆறு', 'சிங்கம்', 'சிங்கம் 2' உள்ளிட்ட படங்கள் மூலம் வரவேற்பை பெற்ற கூட்டணி இயக்குநர் ஹரி - சூர்யா. இவர்கள் இணைந்த படங்கள் அனைத்துமே வசூலை வாரிக் குவித்ததால், இவர்கள் மீண்டும் இணையக் கூடும் என்று செய்திகள் வெளியாகின.

அதனை உறுதிச் செய்வது போன்று, 'அஞ்சான்' டீஸருக்கான சக்சஸ் பார்ட்டியில் "அடுத்தாண்டில் மீண்டும் இயக்குநர் ஹரியுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஆக்சன் ஹீரோவான சூர்யா

ஆக்சன் ஹீரோவான சூர்யா

சிங்கம் படத்திற்கு முன்பே சூர்யா சில ஆக்சன் படங்களில் நடித்திருந்தாலும், அப்படங்கள் அவரை முழு ஆக்சன் ஹீரோவாக நிரூபிக்கவில்லை. ஆனால், ஹரியின் கைவண்ணத்தில் உருவான சிங்கம், சிங்கம்-2 படங்கள்தான் அவரை அதிரடியான ஆக்ஷன் ஹீரோவாக்கின.

கொஞ்சம் ரொமான்ஸ் நிறைய ஆக்சன்

கொஞ்சம் ரொமான்ஸ் நிறைய ஆக்சன்

அதனால் அதையடுத்து மென்மையான கதைகளில் சூர்யாவுக்கான ஆர்வம் குறைந்து போனது.

அதனால், ரொமான்டிக், செண்டிமென்ட் கதைகளுடன் சிலர் சென்றபோது, இதெல்லாம் படத்தில் ஆங்காங்கே இருந்தால் போதும். ஆனால் கதையின் களம் ஆக்சன் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டாராம்.

மனம் கவர்ந்த அஞ்சான்

மனம் கவர்ந்த அஞ்சான்

அதனால்தான், சிங்கம்-2 விற்கு பிறகு கெளதம்மேனன் உள்பட சில டைரக்டர்களின் அதிருப்திக்கு அவர் ஆளாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் லிங்குசாமி சொன்ன மும்பையை மையமாகக்கெண்ட ஸ்கிரிப்ட் சூர்யாவை வெகுவாக கவர்ந்தது.

பிரித்து மேயும் சூர்யா

பிரித்து மேயும் சூர்யா

சிங்கம் படத்தில் சென்னை தாதா பிரகாஷ்ராஜை துரத்தி துரத்தி அடித்தது போன்று இந்த படத்திலும், மும்பை தாதாக்களை பிரிச்சு மேய்கிறாராம் சூர்யா.

மாஸ் ஹீரோ

மாஸ் ஹீரோ

ஆக, இந்த படமும் தன்னை இன்னொரு வலுவான இடத்துக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கும் சூர்யா, அடுத்து வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தில் நடிப்பவர், அதற்கடுத்து மீண்டும் ஹரி இயக்கும் படத்தில் அடுத்த ஆண்டில் நடிக்கிறார்.

சிங்கம் - 3

சிங்கம் - 3

அந்த படத்தின் கதையை இன்னமும் ஹரி சொல்லாதபோதும், அது சிங்கம் 3 வாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறாராம் சூர்யா. ஆனாலும் ஹரியுடன் இணைவது உறுதி, அது சிங்கம் 3தான் என்பதை இப்போதைக்கு சொல்லமுடியாது என்று கூறியுள்ளார் சூர்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X