என்ன சொல்றீங்க? சிவகார்த்திகேயனின் டான் படத்தின் கதை இதுதானா? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்தின் கதை இதுதான் என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
கோலிவுட்டின் புதிய பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன் உருவாகி உள்ளார்.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை செய்த நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டானான சிவகார்த்திகேயன்
அமிதாப் பச்சனின் டான் திரைப்படம் தான் தமிழில் ரஜினி நடிப்பில் பில்லாவாக மாறியது. அமிதாப் பச்சனின் டான் திரைப்படத்தை ஷாருக்கானும் டான் என ரீமேக் செய்து நடித்துள்ளார். இந்நிலையில், கோலிவுட்டின் எஸ்கே சிவகார்த்திகேயனும் டான் டைட்டிலில் நடித்து வருகிறார்.

காலேஜ் பாய்
டான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்று தான் இதுவரை பேச்சுக்கள் எழுந்து வந்தன. டான் படத்தில் இருந்து வெளியான ஜலபுலஜங் பாடலிலும் தான் ஒரு கல்லூரி மாணவனாகவே நடித்து காலேஜ் பேக்ரவுண்டில் நடனமாடிய வீடியோவும் டிரெண்டாகி வருகிறது.

என்ன கதை
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் டான் படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் புதிய கதை ஒன்று வலம் வருகிறது. அது என்ன கதை என்றால், விண்ணைத் தாண்டி வருவாயா படம் போல இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து சினிமா இயக்குநர் ஆவதே கதை என்கின்றனர்.

நம்பலாமா?
ஒவ்வொரு முறையும் முன்னணி நடிகர்களின் படங்கள் உருவாகி வரும் போது தான் இதுதான் அந்த படத்தின் கதை என ஏகப்பட்ட வதந்திகள் வலம் வருவது சகஜமான விஷயம் தான். ஆனால், சில உண்மையான தகவல்களும் வெளியாகி இருப்பது பல படங்கள் வெளியான பிறகு இரண்டும் ஒன்றாக இருப்பதை வைத்து புரிந்து கொண்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன.
Recommended Video

கெளதம் மேனன் கேமியோ
அதுமட்டுமின்றி, இந்த படத்தின் கிளைமேக்ஸில் இயக்குநர் கெளதம் மேனன் வேற கேமியோவாக வரப் போகிறாராம். கல்லூரி போர்ஷன்கள் ஆரம்பத்திலேயே முடிந்து விட்டு, அதன் பின்னர் சிவகார்த்திகேயன் இயக்குநராக அவதாரம் எடுப்பது தான் கதை என்கின்றனர். படம் வெளியானாலும், இதெல்லாம் எந்தளவுக்கு உண்மை என்பது தெளிவாகி விடும்.


Click it and Unblock the Notifications











