தனுஷுக்கு பதிலடி கொடுக்கத் தான் சிவகார்த்திகேயன் இந்த புது அவதாரமா?
Recommended Video

சென்னை: சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் மூவ் தனுஷுக்கு பதிலடி கொடுக்கத்தான் என்று பேச்சு கிளம்பியுள்ளது.
சிவகார்த்திகேயனும், தனுஷும் அண்ணன், தம்பியாக பழகியது அனைவருக்கும் தெரியும். சிவகார்த்திகேயனை வளர்த்துவிட்டு அழகு பார்த்தார் தனுஷ்.
பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். இதுவரை இருவரும் சேரவில்லை.

வளர்ச்சி
தனுஷை பிரிந்த பிறகு அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன். அஜீத், விஜய் ரேஞ்சுக்கு பாக்ஸ் ஆபீஸில் வசூல் மன்னனாகியுள்ளார் சிவா.

தம்பி
தனுஷ் சிவாவை மட்டும் அல்ல இசையமைப்பாளர் அனிருத்தையும் பிரிந்துவிட்டார். அனிருத் தற்போது சிவகார்த்திகேயனுடன் உள்ளார். சிவாவின் ஆஸ்தான இசையமைப்பாளராகிவிட்டார் அனிருத்.

தனுஷ்
சிவகார்த்திகேயன் பணியாற்றிய அதே விஜய் டிவியில் வேலை செய்த தீனாவை ஹீரோவாக்கியுள்ளார் தனுஷ். தீனா ஹீரோவாகியுள்ள படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

அருண்ராஜா காமராஜ்
தனுஷ் தீனாவை ஹீரோவாக்கியுள்ள நேரத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். நண்பன் அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தை தயாரிக்கிறார் சிவகார்த்திகேயன்.

தயாரிப்பாளர்
தனுஷ் தீனாவை அடுத்த சிவகார்த்திகேயனாக்க முயற்சி செய்கிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தனுஷை போன்று தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து பதிலடி கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.


Click it and Unblock the Notifications











