twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீரன்... ரொம்பவே மிகைப்படுத்துகிறார்களா வலைவாசிகள்?

    By Shankar
    |

    Recommended Video

    தீரன்... பாலைவிட டிகாஷன் அதிகமாக கலக்கப்பட்ட காஃபி!- வீடியோ

    சில வருடங்களுக்கு முன்னால் மக்கள் படம் பார்த்த விதத்திற்கும் இப்பொழுது மக்கள் படம் பார்க்கின்ற விதத்திற்கும் நிறைய மாற்றங்கள். முன்பு ஒரு படத்தை படமாகப் பார்த்தார்கள். இப்போது அது படம் என்பதைத் தவிற மற்ற எல்லாமுமாகப் பார்க்கிறார்கள். இயக்குநருக்கே தெரியாத குறியீடுகளைத் தேடிப்பிடிக்கிறார்கள். இன்ன அரசியலைத்தான் இந்தப் படம் பேசுகிறது என பிடித்து வைக்கிறார்கள். படம் எப்படி இருக்கிறது என்பதைவிட படம் எதைப் பற்றி பேசுகிறது என்பதைக் கொண்டு படத்தின் தரத்தை நிர்ணயிக்கிறார்கள்.

    தற்பொழுது அதே போன்றதொரு மிகைபடுத்தலுடன் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. தமிழ்நாட்டில் இருபது வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

    Is social media over hyped Theeran?

    "அட்டகாசம் செய்யும் அரசியல்வாதியை, எண்ணி ஏழே நாட்களில் தூக்குகிறேன் பார்," என்று சவால்விட்டு வெற்றி பெறும் வழக்கமான தமிழ் சினிமா போலீஸ் படங்களிலிருந்து தீரன் நிச்சயம் வேறுபட்ட ஒரு திரைப்படம் என்பதில் துளி கூட சந்தேகமில்லை.

    நாம் தமிழில் இதுவரை பார்க்காத, வித்தியாசமான கதைக்களம். புதுமையான எதிரிகள். தனிமையில் இருக்கும் வீடுகளில் புகுந்து வீட்டில் இருப்பவர்களைக் கொன்றுவிட்டு கொள்ளையடித்துச் செல்லும் கொலையாளிகளை பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவர, நமக்கே அடிவயிற்றில் சற்று புளியைத்தான் கரைக்கிறது. அதுவும் இடைவேளைக் காட்சியில் உச்சகட்ட பயம் கலந்த பதற்றம்.

    வேட்டையாடும் குழுக்கள் எப்படி மக்களுடன் சேர்த்துக் கொள்ளப்படமால் கொஞ்சம் கொஞ்சமாக மனித வேட்டைக்கு மாறினார்கள் என்பதை ஆதி வரலாறுகளிலிருந்து எடுத்துக் கூறுவதெல்லாம் அருமை.

    Is social media over hyped Theeran?

    ஆனால் அனைத்தும் அவ்வப்போதுதான். முழுப்படத்தையும் அதே ஈடுபாட்டோடு நம்மால் பார்க்க முடிகிறதா என்றால் இல்லை.

    இயக்குநர் வினோத்தின் முதல் திரைப்படமனான சதுரங்க வேட்டையினை எடுத்துக்கொண்டால், திரைக்கதையில் எந்த இடத்திலும் எந்த விதத் தொய்வுமே இல்லாமல் சீராகச் சென்று முடியும், ஆனால் இந்த தீரன் திரைப்படத்தில் அது ரொம்பவே மிஸ்ஸிங்.

    கார்த்தியை அந்தக் கொள்ளை கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக அமர்த்துவதற்கு முன்பு கார்த்தியின் காதல், கார்த்தியின் கேரியர் வளர்ச்சி என அவர்கள் காட்ட முயன்றிருக்கும் காட்சிகள்தான் படத்தின் சுவாரஸ்யத்திற்கு முட்டுக்கட்டை. அதுவும் கார்த்தி-ரகுல் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் பெரிதாக காதலும் எடுபடவில்லை, காமெடியும் டுபடவில்லை. இடைவேளைக்கு ஒரு இருபது நிமிடங்கள் முன்பு கதை ஓட்டம் சூடு பிடிக்கிறது.

    கொள்ளையடிக்கும் கும்பல் பயன்படுத்தும் ஆயுதம், அவர்கள் கொள்ளையடிக்கும் முறை என ஒவ்வொன்றாகத் திரையில் விரியும் பொழுது பயம் கலந்த சுவாரஸ்யத்துடன் நாம் திரைப்படத்திற்குள் ஒன்றுகிறோம்.

    Is social media over hyped Theeran?

    படம் கிட்டத்தட்ட முடியப்போகிற தருவாயில் ஒரு பதிமூன்று பேரை வரிசையாக பெயர், அவர்கள் செய்யும் செயல் என அறிமுகப்படுத்திவிட்டு ஒவ்வொருவரைத் துரத்தி சுட்டுப் பிடிப்பதை சலிக்காமல் காட்டுவதெல்லாம் வெறும் நேரத்தைக் கடத்துகின்றனவே தவிற வேறு எந்த ஒரு தாக்கத்தையும் நமக்குள் ஏற்படுத்தவில்லை.

    படத்தின் நீளமும் பாடல்களும் இந்தப் படத்தின் சுவாரஸ்யத்திற்கு மிகப்பெரிய தடைக்கல். காதல் காட்சிகளையும் பாடல்களையும் வெட்டியெறிந்து விட்டு வெறும் இரண்டு மணி நேரப் படைப்பாகக் கொடுத்திருந்தால் நிறைய கேள்விகளைத் தவிர்த்திருக்கலாம்.

    ஆனால் ஒன்று, தீரன் தமிழ் சினிமாவில் வித்யாசனமான முயற்சி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்காக ரொம்பவே மிகைப்படுத்துவது, அந்தப் படத்துக்கே ஆபத்தாக மாறும் வாய்ப்பிருக்கிறது.

    -முத்துசிவா

    English summary
    Is social media over hyped Theeran Athikaram Ondru movie? Here is an analysis.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X