தாத்தா சொன்ன ஜோசியம் உண்மையாயிடும் போலயே.. இந்த வாரம் அவர்தான்? டேஞ்சர் ஸோனில் பிக்பாஸ் போட்டியாளர்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி பெரும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் நாமினேஷன் நடைபெறுவதும், ஞாயிற்றுக் கிழமைகளில் எவிக்ஷன் நடைபெறுவதும் வாடிக்கையாக உள்ளது.

நடிகை ரேகா

நடிகை ரேகா

அதன்படி பிக்பாஸ் வீட்டில் இதுவரை மூன்று எவிக்ஷன் நடைபெற்றது. இதில் முதல் எவிக்ஷனில் நடிகை ரேகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இரண்டாவது எவிக்ஷனில் ஆஜித்தின் பெயர் இடம் பெற்றது.

எஸ்கேப்பான ஆஜித்

எஸ்கேப்பான ஆஜித்

ஆனால் அவரிடம் எவிக்ஷன் ஃபிரி பாஸ் இருந்ததால் அதனை பயன்படுத்தி பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்தார் ஆஜித். அதனை தொடர்ந்து கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து பாடகர் வேல்முருகன் வெளியேறினார்.

நாமினேஷன் லிஸ்ட்

நாமினேஷன் லிஸ்ட்

இந்நிலையில் இந்த வாரம் அதாவது திங்கள் கிழமை பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. இதில் 7 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெற்றனர்.

7 பேர் லிஸ்ட்டில்

7 பேர் லிஸ்ட்டில்

அவர்களில் ஒவ்வொருவருமே மிக முக்கிய போட்டியாளராக பார்க்கப்படுகின்றனர். அதாவது, ஆரி பாலாஜி, சனம் ஷெட்டி, அர்ச்சனா, சோம் சேகர், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர்.

தலைவராக்கவில்லை

தலைவராக்கவில்லை

இவர்களில் இந்த வாரம் சோம சேகர்தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என ஏற்கனவே நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். அதற்காகதான் அவரை இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாகக்கூட ஆக்கவில்லை என்றும் பதிவுகளை ஷேர் செய்தனர்.

தாத்தா சொன்ன ஜோசியம்

தாத்தா சொன்ன ஜோசியம்

நேற்றைய எபிசோடிலும் கூட மார்னிங் ஆக்டிவிட்டி டாஸ்க்கில் ஜோசியம் சொன்ன சுரேஷ் சக்கரவர்த்தி, சோம் சேகரின் நூல்தான் ஊசல் ஆடிக் கொண்டிருப்பதாக கூறினார். மாஞ்சா போட்டு மனசை பலப்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

டேஞ்சர் ஸோனில்

டேஞ்சர் ஸோனில்

இந்நிலையில் நாளையுடன் பிக்பாஸ் நாமினேஷனில் இருப்பவர்களை காப்பாற்றுவதற்கான வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. நாளை ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது வரை மிகக் குறைந்த வாக்குகளை பெற்று சோம் சேகர் டேஞ்சர் ஸோனில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.

கன்டென்ட் கொடுக்கவில்லை

கன்டென்ட் கொடுக்கவில்லை

வாக்கு எண்ணிக்கை வரிசையில் சுரேஷ் சக்கரவர்த்தியும் சோம் சேகரும் தான் கடைசி இரண்டு இடங்களில் இருப்பதாக கூறப்படுகிறது. சோம் சேகர் இதுவரை எந்த கன்டென்ட்டும் கொடுக்கவில்லை. யாருடனும் வம்பு சண்டை என செல்லவில்லை.

அதிக வாய்ப்பு..

அதிக வாய்ப்பு..

பாலாஜி சொன்னது போல் பொம்மையாக தான் இருக்கிறார். ஆகையால் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்கள் விஜய் டிவி சீரியல் நடிகரான முகமது ஆசிம் வைல்டு கார்டாக வர உள்ளார் என தகவல் பரவி வருவது குறிப்பிடதக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X