தள்ளிப் போகிறதா சூர்யாவின் சூரரைப் போற்று ரிலீஸ்? அந்த சான்றிதழ்.. இப்படியொரு பிரச்னையாமே?
சென்னை: சூர்யாவின் சூரரைப் போற்று ரிலீஸ் தள்ளிப்போக இருப்பதாகக் கூறப்படுகிறது.
சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் இறுதியில் முடிவடைந்தது.
'இறுதிச்சுற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படத்தில், அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்துள்ளார்.

மோகன் பாபு
ஜாக்கி ஷெராப், கருணாஸ், தெலுங்கு நடிகர் மோகன் பாபு முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இசை அமைத்துள்ளார். படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து
தயாரித்துள்ளது.

விமானத்தில் ஷூட்டிங்
விமானம் தொடர்பான கதை என்பதால், விமானத்தில் சுமார் 15 நாள் ஷூட்டிங் நடந்துள்ளது. இதற்காக தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி ஷூட்டிங் நடத்தியுள்ளனர். இந்தப் படத்தை கடந்த ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், கொரோனா காரணமாக ரிலீஸ் செய்ய முடியவில்லை.

அமேசான் பிரைம்
இந்நிலையில், இந்தப் படம் அமேசான் பிரைமில் வரும் 30 ஆம் தேதி வெளியாக இருப்பதாக நடிகர் சூர்யா அறிவித்திருந்தார். தமிழில் முன்னணி ஹீரோ ஒருவரின் படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விநியோகஸ்தரும் தியேட்டர் அதிபர் சங்க நிர்வாகிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர்.

வெளியீட்டுப் பட்டியல்
இந்நிலையில், அமேசான் வெளியிட்டுள்ள இந்த மாதத்துக்கான படங்கள் வெளியீட்டுப் பட்டியலில் சூரரைப் போற்று இடம்பெறவில்லை. இதுபற்றி விசாரித்தபோது, இந்தியாவில் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.

ஒப்புதல் வேண்டும்
இதனால், இந்திய விமானப் படை தரப்பிலிருந்து ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக கடந்த சில மாதங்களாக படக்குழு காத்திருக்கிறது. அது இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்துவிட்டால், வரும் 30 ஆம் தேதி அமேசானில் படம் ரிலீஸ் ஆகும். தாமதமானால், ரிலீஸ் தள்ளிப் போகும்' என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











