twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'சரண்... பெரியவங்க விவகாரம்... நீங்கெல்லாம் பேஸ்சவே கூடாது... தள்ளி நில்லுங்க!'

    By Shankar
    |

    'இளையராஜா - எஸ்பிபி விவகாரத்தின் பின்னணியில் இருப்பது அவர்களின் இரு வீணாய்ப் போன வாரிசுகள்தான்... அவர்கள் சம்பாதிக்க இந்த இசை மேதைகளை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்' என்ற ஒரு கருத்து பொதுவெளியில் பேசப்பட்டு வருகிறது.

    அதில் உண்மை இருக்குமோ என யோசிக்க வைத்திருக்கிறது எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மகன் சரணின் பேச்சு.

    Is SPB Charan twists Ilaiyaraaja notice?

    சரண் ஏற்கெனவே பெண்கள், போதை, கடன்கள் என மாட்டாத சிக்கலில்லை. எல்லாவற்றிலிருந்தும் அவரை மீட்டுக் கொண்டு வந்தவர் எஸ்பிபி. படத் தயாரிப்பும் சரணுக்கு பெரிதாகக் கைகொடுக்கவில்லை.

    இப்போது தன் அப்பாவை அழைத்துக் கொண்டு உலகம் சுற்றி கச்சேரி நடத்திக் கொண்டிருக்கிறார். இந்தக் கச்சேரிகளில் 40 பாடல்கள் பாடப்படுகின்றன என்றால், அவற்றில் 32-35 பாடல்கள் இளையராஜா இசையில் உருவாகி, எஸ்பிபியுடன் இணைந்து பிற கலைஞர்கள் பாடியவை. அதாவது 80 சதவீதத்துக்கும் மேலான பாடல்கள் ராஜாவுடையவை. மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் நான்கைந்து மட்டுமே.

    எனவேதான் அவற்றுக்குரிய காப்புரிமைத் தொகையைக் கோருகிறார் ராஜா. அதுவுமில்லாமல், ஒரு கச்சேரிக்கு மக்களிடமிருந்து பெறும் கட்டணம் எப்படியும் 100 டாலர் வரை இருக்கும். இது பக்கா வர்த்தகம். இதில் முக்கிய முதலீடே ராஜாவின் பாடல்கள்தான். அதற்கான நியாயமான பலனைத் தர ஏன் இத்தனை கஷ்டம்.

    மெல்ல மெல்ல இப்போதுதான் மக்கள் இந்தப் பிரச்சினையைப் புரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் எஸ்பிபி மகன் சரண் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

    இளையராஜா இசையமைக்க வருவதற்கு முன்பே எஸ்பிபி பாட ஆரம்பித்துவிட்டாராம். அதனால் இளையராஜா பாட்டை இனி பாடவேண்டியதில்லை என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

    "இந்த உண்மை தமிழ்நாட்டுக்கே தெரியும். அதை சரண் சொல்ல வேண்டியதில்லை. இளையராஜாவின் இசையுடன், அவருக்கும் எஸ்பிபி போன்ற பாடகர்களுக்கும் இடையிலான நட்பையும் சேர்த்தே ரசித்தவர்கள் தமிழர்கள். அவர்களுக்குள் இப்படி ஒரு பிரச்சினை வரக் காரணமே சரண் மாதிரி ஆட்களாகக் கூட இருக்கும். இரண்டு மேதைகளுக்குள் ஏதோ மனக்கசப்பு. ராஜா தனிப்பட்ட முறையில் கேட்டதை பொதுவெளிக்கு எஸ்பிபி கொண்டு வந்ததே தவறு. அதற்கு சரண் தூண்டுதலாகக் கூட இருக்கலாம்... அவரெல்லாம் இதுபற்றிப் பேசவே கூடாது.... அது தானாகவே சரியாகிவிடும்..," என்கிறார் ராஜா - எஸ்பிபிக்கு நெருக்கமான ஒரு இசைக் கலைஞர் (கண்டிப்பாக பெயர் வேண்டாம் என்ற நிபந்தனையுடன்).

    English summary
    Sources say that SPB's son Charan only twisted Ilaiyaraaja's copyright notice against his father.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X