மகளை நடிக்க வைப்பாரா ஸ்ரீதேவி?

By Mayura Akilan

மகளை நடிக்க வைப்பாரா ஸ்ரீதேவி?

மகளை நடிக்க வைப்பாரா ஸ்ரீதேவி?

ஸ்ரீதேவியின் மூத்த மகள் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோலிவுட், பாலிவுட் என சினிமா உலகின் கனவுக் கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவி 15 ஆண்டுகளுக்கு பின்னர் ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்' படத்தின் மூலம் நடிக்க வந்திருக்கிறார்.

அவருடைய இரண்டு மகள்களுமே இப்போது மீடியாவின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

கதாநாயகியாக நடிக்க வைக்க...

கதாநாயகியாக நடிக்க வைக்க...

இந்த நிலையில் ஸ்ரீதேவி- போனிகபூர் தம்பதியரின் மூத்த மகள் ஜான்வியை திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்திகள் வந்துள்ளன. திருமணமான போனிகபூரை இரண்டாவது திருமணம் செய்தவர் ஸ்ரீதேவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ஜான்வி இப்பொழுதே நடனம் கற்றுக்கொண்டிருக்கிறார். கொஞ்சம் புஷ்டியாக இருந்த இவர் இப்போது ரெகுலராக ஜிம்முக்கு சென்று உடலை பிட்டாக வைக்க முயன்று வருகிறாராம்.

ஸ்ரீதேவி கூறியது நினைவிருக்கலாம்...

ஸ்ரீதேவி கூறியது நினைவிருக்கலாம்...

அம்மா அளவுக்கு அழகு தேவதையாக இல்லாவிட்டாலும் மாடர்ன் லுக் கொண்ட வலம் வரும் ஜான்விக்கு இப்போது 15 வயதாகிறது. அவரைப் போலவே சிறுவயதிலேயே நடிக்கவந்தாலும் வரலாம் என்கின்றனர் திரை உலக பிரமுகர்கள்.

ஆனால் இது குறித்து ஸ்ரீதேவி- போனிகபூர் தம்பதியர் கருத்து எதுவும் கூறவில்லை. மகளை நடிக்க வைக்கும் எண்ணமில்லை என்று சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி கூறியது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X