பவர் ஸ்டார் அல்ல பிராடு ஸ்டார் சீனிவாசன்: குவியும் மோசடி புகார்கள்

ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபர் ரங்கநாதன் என்பவருக்கு ரூ.20 கோடி கடன் வாங்கித் தர ரூ.50 லட்சம் கமிஷன் பெற்று ஏமாற்றியவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். இதையடுத்து ரங்கநாதன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின்பேரில் பவர் கடந்த 26ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பிறகு வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் மேலும் 3 வழக்குகளில் மீண்டும் கைது செய்யப்பட்டார். பவரை ஏற்கனவே தங்கள் காவலில் எடுத்து விசாரித்த போலீசார் தற்போது அவரை மீண்டும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று இரவு முதல் பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்த பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவிருக்கின்றனர். இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பவர் ஸ்டார் மீது ஏராளமானோர் புகார் கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











