விஜய்- வெற்றிமாறன் படத்தை இவங்களா தயாரிக்கிறாங்க?

By

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை பிரபல நிறுவனம் தயாரிக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது .

தனுஷ், மஞ்சு வாரியர், டீஜே அருணாச்சலம், பசுபதி, கென் கருணாஸ் உட்பட பலர் நடித்திருந்த படம், அசுரன். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜி.வி.பிரகாஷ்ராஜ் இசை அமைத்திருந்தார்.

இந்தப் படத்தின் கதை, எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. தனுஷ் உட்பட படத்தில் நடித்த பலரும் திருநெல்வேலி வழக்கில் பேசி நடித்திருந்தனர். இதற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது.

அசுரன் சூப்பர் ஹிட்

அசுரன் சூப்பர் ஹிட்

படமும் சூப்பர் ஹிட்டானது. நூறாவது நாளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. இதை அடுத்து வெற்றிமாறன், சூரி நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். அதற்கான வேலைகளில் அவர் இறங்கி இருக்கிறார். இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க இருக்கிறார்.

விஜய் நடிக்கும் படம்

விஜய் நடிக்கும் படம்

இதை அடுத்து விஜய் நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்கப் போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளியாயின. இதுபற்றி இருவரும் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்பட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன்பே, விஜய் படத்தை வெற்றிமாறன் இயக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாயின.

சன் பிக்சர்ஸ்

சன் பிக்சர்ஸ்

இந்நிலையில், விஜய்-வெற்றிமாறன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாயின.

விஜய்-வெற்றிமாறன்

விஜய்-வெற்றிமாறன்

இதுபற்றி வெற்றிமாறன் தரப்பில் விசாரித்தபோது, எதும் முடிவாகவில்லை. முடிவான பின் அறிவிக்கிறோம் என்று தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X