பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா சன் டிவியின் இந்த இளம் செய்தி வாசிப்பாளர்? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சன் தொலைக்காட்சியின் பிரபல செய்தி வாசிப்பாளர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்க இன்னும் நான்கு நாட்களே உள்ளது. இதற்கான உச்சக்கட்டப் பணிகள் படு தீவிரமாய் நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இறுதிப்பட்டியல்
நிகழ்ச்சி தொடங்க இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் இன்னமும் அரசல் புரசலாகவே உள்ளது. போட்டியாளர்களின் இறுதி பட்டியல் என நாள்தோறும் ஒரு லிஸ்ட் வைரலாகி வருகிறது.

பிரபலங்கள் பெயர்
அதன்படி, நடிகை சனம் ஷெட்டி, கேப்ரில்லா, நடிகை ரேகா, நடிகை ஷிவானி நாராயணன், நடிகை ரம்யா பாண்டியன், விஜே அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா,பாடகர் அஜித், பாடகர் வேல்முருகன், நடிகர் பாலாஜி முருகதாஸ், ,நடிகர் சுரேஷ், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகர் ஆரி, நடிகர் அனுமோகன், மாடல் சோம்சேகர் ஆகியோரின் பெயர்கள் இறுதிப் பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியானது.

செய்தி வாசிப்பாளர்
இந்நிலையில் அதிரடி திருப்பமாய் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சன் நியூஸ் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் மெயின் நியூஸில் பல ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக இருந்து வருகிறார் அனிதா சம்பத்.

படங்கள்
வணக்கம் தமிழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் அனிதா சம்பத். காலா, 2.0, காப்பான், ஆதித்ய வர்மா, தர்பார், டேனி உள்ளிட்ட படங்களில் சிறு கதாப்பாத்திரங்களிலும் செய்தியாளராகவும் நடித்துள்ளார் அனிதா சம்பத்.

பிக்பாஸில்?
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அனிதா சம்பத், அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். கடந்த ஆண்டுதான் அனிதா சம்பத், பிரபா என்பவரை திருமணம் செய்தார். இந்நிலையில் அனிதா சம்பத் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்வாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லாஸ்லியா ஃபாத்திமா பாபு
கடந்த சீசனில் செய்தி வாசிப்பாளர்கள் லாஸ்லியா மற்றும் ஃபாத்திமா பாபு ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்கள். இந்நிலையில் இம்முறை அனிதா சம்பத் அவர்களின் இடத்தை நிரப்ப உள்ளார் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











