பொன்னியின் செல்வன் வெற்றி எதிரொலி..காஃபி வித் காதல் ரிலீஸ் தேதி மாற்றமா?
சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் காஃபி வித் காதல் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லைகா தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்,மலையாளம் என 5 மொழிகளில் வெளியான படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஜெயம்ரவி,பார்த்திபன்,சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்மி, விக்ரம் பிரபு, பிரபு என படம் முழுக்க ஒரு நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் படத்தை இயக்குநர் மணிரத்தினம் இரண்டு பாகமாக எடுத்துள்ளார். பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படத்தை ரசிகர்கள் திரண்டு வந்து பார்த்து ரசித்து புகழ்ந்து வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பொன்னிநதி, சோழா சோழா, அலைகடல் பாடல் ரசிகர்களின் பேவரைட் பாடலாக மாறி உள்ளது.

பாசம் மிகுந்த அருள்மொழிவர்மன்
பீமா படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியாக நடித்த விக்ரம் இப்படத்தில் அண்ணனாகவும், உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் படத்தில் ஜோடியாக நடித்த ஜெயம்ரவி தம்பியாகவும் நடித்துள்ளார். அக்கா மீது மிகுந்த பாசம் வைத்துள்ள அருள்மொழிவர்மனின் கதாபாத்திரம் அவருக்கு கனகச்சிமாக பொருந்தி உள்ளது.

230 கோடி வசூல்
படம் வெளியாகி மூன்று நாட்களாகி உள்ள நிலையில், 230 கோடி தாண்டி உள்ளது. பிளாக்பஸ்டரை நோக்கி சென்று கொண்டிருக்கும் இப்படம் இன்று ரூ 250 கோடி வசூலை எட்டிவிடும். தொடர்ந்து தசரா விடுமுறை தினம் என்பதால் பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை முறியடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

வெளியாகுமா?
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்திற்கு ரசிகர்களிடம் பெருகி வரும் ஆதரவால் இந்தவாரம் வெளியாக இருந்த காஃபி வித் காதல் திரைப்படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் முக்கோண காதல் திரைப்படமாக உருவாகி உள்ள படம் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











