என்னது தலைவர் 169 படத்தோட டைரக்டர மாத்தப் போறாங்களா?... தலைவர் கையில் இறுதி முடிவு!

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது பீஸ்ட் படம். இந்தப் படத்தை தொடர்ந்து தலைவர் 169 படத்தை இயக்க நெல்சன் திலீப்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்தப்படத்தை அவர் மே மாதம் முதல் துவக்கவிருந்தார்.

பீஸ்ட் படம்

பீஸ்ட் படம்

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது பீஸ்ட் படம். படத்தின் தலைப்பையொட்டி அதிரடி சரவெடியாக படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. படத்தின் பிரமோஷன்களும் அதைத்தான் தெரிவித்தன.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பீஸ்ட்

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பீஸ்ட்


அடுத்தடுத்து ட்ரெயிலர், பாடல்கள், தீம் பாடல், ப்ரமோக்கள் என சன் பிக்சர்ஸ் அதிரடி கிளப்பியது. ரசிகர்களும் சிறப்பான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து படத்திற்கு விஜய்யின் பேனர்கள் உள்ளிட்டவற்றை வைத்து படத்திற்காக காத்திருந்தனர். பீஸ்ட் படத்தை திருவிழாவாக கொண்டாட அவர்கள் வெயிட் செய்தனர்.

கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்

படம் கடந்த 13ம் தேதி வெளியான நிலையில் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்றது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை. விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோவை நெல்சன் திலீப்குமார் வீணாக்கியுள்ளதாக விமர்சிக்கப்பட்டது.

சொதப்பலான திரைக்கதை

சொதப்பலான திரைக்கதை


சாதாரண கதையை சாதாரண காட்சிகளும் அவர் எடுத்துள்ளதாக கூறப்பட்டது. சிறப்பான திரைக்கதையும் இல்லாமல் சொதப்பலான காட்சிகளுடன் படம் வெளியாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. முன்னதாக பீஸ்ட் படம் ரிலீசாவதற்கு முன்பு தலைவர் 169 படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தலைவர் 169 பட வாய்ப்பு

தலைவர் 169 பட வாய்ப்பு

அண்ணாத்த படத்தை தொடர்ந்து இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க திட்டமிட்டு நெல்சனுக்கு இயக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு முன்பே வெளியானது. பீஸ்ட் ரிலீசுக்கு பின்பு மே மாதத்தில் தலைவர் 169 படத்தின் சூட்டிங் துவங்கும் என்றும் கூறப்பட்டது.

நீடிப்பாரா நெல்சன்?

நீடிப்பாரா நெல்சன்?

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களை தொடர்ந்து தலைவர் 169 படம் துவங்குவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. சன் பிக்சர்சும் நெல்சன் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் படம் குறித்த முடிவை ரஜினியிடமே விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தேசிங்கு பெரியசாமிக்கு வாய்ப்பு?

தேசிங்கு பெரியசாமிக்கு வாய்ப்பு?

அப்படி நெல்சன் இந்தப் படத்திலிருந்து மாற்றப்பட்டால் தலைவர் 169 படத்தை அட்லி அல்லது தேசிங்கு பெரியசாமிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதிலும் அட்லி தற்போது ஷாருக்கான் படத்தில் பிசியாக உள்ளதால், தேசிங்கு பெரியசாமிக்கே தலைவர் 169 படத்திற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் கையில் இறுதி முடிவு?

ரஜினியின் கையில் இறுதி முடிவு?

ஆனால் இந்த விஷயத்தில் அதிரடியாக முடிவெடுக்காமல், ரஜினி அமைதியாக ஆலோசித்து முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். முன்பே அறிவித்தபடி நெல்சனுக்கே தலைவர் 169 படத்தை இயக்க அவர் வாய்ப்பளிப்பார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பை விரைவில் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X