ரொம்ப அசிங்கமாகிடுச்சி.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா சுரேஷ்? பரபரப்பு தகவல்!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறப் போகிறார் என்கிற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 | Promo 3 | Day 17

சனம் ஷெட்டி தன்னை தரக்குறைவாக பேசியதால், இதுவரை இல்லாத அளவுக்குத் தானே பிக் பாஸிடம் கோரிக்கை வைத்து கன்ஃபெஷன் ரூமுக்கு சென்று முறையிட்டார்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டே சுரேஷ் வெளியேறப் போகிறார் என்கிற தகவல் தீயாக பரவி வருகிறது.

போடா வாடா என பேசிய சனம்

போடா வாடா என பேசிய சனம்

கேபி உள்பட ஹவுஸ்மேட்ஸ் பலரும் சுரேஷ் சக்கரவர்த்தியை தாத்தா என அழைக்கின்றனர். தாத்தா வயதில் இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தியை ஒரு அப்பா ஸ்தானத்திலாவது நினைத்து பார்த்து, கொஞ்சம் மரியாதையாக சனம் பேசியிருக்கலாம். வாடா, போடா என பெரியவரை பேசியது தவறு என்று பலரும் சனம் ஷெட்டியை திட்டி இருந்தனர்.

பிக் பாஸிடம் முறையிட்டு இருக்கலாம்

பிக் பாஸிடம் முறையிட்டு இருக்கலாம்

சுரேஷ் சக்கரவர்த்தி செய்தது தப்புன்னு தோன்றியிருந்தால், சனம் ஷெட்டி பிக் பாஸிடம் முறையிட்டு இருக்கலாம். அதற்கு பதிலாக, அவரே சுரேஷ் சக்கரவர்த்தை வரம்பு மீறி பேசியது மிகப்பெரிய தவறு என்றே சமூக வலைதளத்தில் சனம் ஷெட்டியை கிழித்துத் தொங்க விட்டு வருகின்றனர்.

வெளியேறுகிறாரா சுரேஷ்

வெளியேறுகிறாரா சுரேஷ்

சனம் ஷெட்டி அப்படி பேசியதால், இனிமேலும் தான் இந்த வீட்டில் இருந்து கேம் விளையாட வேண்டும் என்கிற அவசியம் தனக்கு இல்லை என்றும், சின்னவங்க, பெரியவங்கன்னு மட்டு மரியாதை இல்லாம நடந்துக்குறாங்க, ரொம்ப அசிங்கமா ஆகிடுச்சு, நான் இந்த வீட்டில இருந்து வெளியேறுகிறேன் பிக் பாஸ் என கன்ஃபெஷன் ரூமில் அழுது புலம்பிய பிறகு சுரேஷ் சொன்னதாக பரபரப்பு தகவல்கள் கிளம்பியுள்ளன.

ஓவியாவை போலவே

ஓவியாவை போலவே

பிக் பாஸ் வீட்டில் இவர் தான் வின்னர் ஆவார் என முதல் சீசனில் ஓவியாவை ரசிகர்கள் நினைத்து இருந்த நிலையில், அவருக்கு பைத்தியக்காரி பட்டம் கட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றியதை போலவே சுரேஷ் சக்கரவர்த்தியையும் வெளியேற்ற பிக் பாஸ் போட்ட பிளானா என்கிற ரீதியிலும் கேள்விகள் எழுந்துள்ளன.

சுசித்ரா வரவுக்காக

சுசித்ரா வரவுக்காக

மேலும், இந்த வாரம் பாடகி சுசித்ரா பிக் பாஸ் வீட்டுக்கு வர உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில் தான், இப்படி சனம் ஷெட்டியை தூண்டி விட்டு ஓவராக பேசி, சுரேஷ் சக்கரவர்த்தியே வேறு வழியில்லாமல் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போடப்பட்ட சூழ்ச்சி என்றும் கருத்துக்கள் பரவி வருகின்றன.

உண்மை என்ன?

உண்மை என்ன?

இதில் எது உண்மை என்பது இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கட்டாயம் தெரிந்து விடும். கன்ஃபெஷன் ரூமில் அழுது புலம்பிய மொட்டை தல சுரேஷ் தாத்தா பிக் பாஸ் வீட்டில் இனியும் நீடித்து ரகளை செய்வாரா? இல்லை அதிரடியாக வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பாரா என்பதை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X