எதற்கும் துணிந்தவன் படத்திலும் வக்கீலாக நடிக்கிறாரா சூர்யா? வெளியானது BTS புகைப்படம்!

சென்னை: ஜெய்பீம் திரைப்படத்தில் வக்கீலாக நடித்து சர்வதேச கவனத்தை ஈர்த்த நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்திலும் சூர்யா வக்கீலாக நடிக்கிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஏற்கனவே பசங்க 2 படத்தில் நடித்த சூர்யா தம்பி கார்த்திக்கு கடைக்குட்டி சிங்கம் எடுத்து ஹிட் கொடுத்ததை போல தனக்கும் ஒரு கமர்ஷியல் படம் பண்ண சொல்லி கேட்க பாண்டிராஜும் எதற்கும் துணிந்தவன் என்கிற டைட்டிலுடன் மரண சம்பவம் பண்ண காத்திருக்கிறார்.

வரும் பிப்ரவரி 4ம் தேதி படம் வெளியாகும் என அறிவித்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

பட்டைய கிளப்பும் பாடல்கள்

பட்டைய கிளப்பும் பாடல்கள்

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் கிராமம் சார்ந்த படங்களுக்கு எல்லாம் அவர் தான் ஆஸ்தான வித்துவானாக மாறி உள்ளார். அவர் இசையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வாடா தம்பி, உள்ளம் உருகுதய்யா மற்றும் சமீபத்தில் சிவகார்த்திகேயன் வரிகளில் வெளியான சும்மா சுர்ருன்னு உள்ளிட்ட பாடல்கள் பட்டித் தொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகின்றன.

டிரைலர் எப்போ

டிரைலர் எப்போ

விரைவில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீசர் மற்றும் டிரைலர் எப்போது வெளியாகும் என்கிற கேள்விகளை சூர்யாவின் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். 2 மாதங்களுக்கு முன்னதாக வெளியான ரிலீஸ் தேதி அறிவிப்பு டீசரில் கிராமத்து இளைஞராக வேட்டி சட்டையில் மிரட்டிய சூர்யா தற்போது வெளியாகி இருக்கும் BTS (Behind the Scene) புகைப்படத்தில் பேன்ட் மற்றும் வெள்ளை சட்டை அணிந்து புது லுக்கில் தென்படுகிறார்.

வக்கீலா

வக்கீலா

ஜெய்பீம் படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்து சர்வதேச அளவில் அவரது புகழ் உயர்ந்துள்ள நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்திலும் வழக்கறிஞராக நடிக்கிறாரா சூர்யா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் ஹீரோயின் பிரியங்கா அருள் மோகன் உடன் கோர்ட் செட்டில் நடிகர் சூர்யா இந்த கெட்டப்பில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சம்பவம் லோடிங்

சம்பவம் லோடிங்

படப்பிடிப்பு தளத்தில் சூர்யா இருக்கும் புதிய புகைப்படம் வெளியாகி உள்ள நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடிகர் சூர்யா அடுத்த தரமான சம்பவத்தை செய்ய காத்திருக்கிறார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தியேட்டரில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேற லெவல் கொண்டாட்டத்தை திரையரங்குகளில் தெறிக்கவிட அன்பான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X