பாவனிக்கு அந்த பயம் வந்துடுச்சா? திடீர்னு இவ்ளோ நல்லவரா மாறிட்டாரே.. அதுதான் காரணமா?
சென்னை: ஆகாயம் சக்தியுடன் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை மகா ராணியாக ஆள சிம்மாசனம் எல்லாம் பாவனிக்கு கொடுக்கப்பட்டு இருந்தாலும், அவரிடம் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளது.
எங்கிட்டேயும் ஒரு காயின் இருக்கு அப்போ என்ன பண்றேன்னு பாருங்க என சவால் விட்ட பாவனி பவர் கிடைத்ததும் இந்த அளவுக்கு அடக்கி வாசிக்கிறாரே என்ன காரணம் என்கிற கேள்வியும் இயல்பாக எழத்தான் செய்கிறது.
தாமரை செல்வியை வேற அசிஸ்டென்ட்டாக மாற்றி அவருடன் சண்டை போடாமல் இருக்க வழி செய்துள்ளார் என்கிற நல்ல முயற்சிக்காகவும் பாவனியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பாவனிக்கு பிறந்தநாள்
பிக் பாஸ் வீட்டின் அழகு பதுமையாக இருக்கும் பாவனிக்கு இன்று 34வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. 1987ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி பிறந்தவர் பாவனி ரெட்டி. சில படங்களிலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்த இவர் தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் ரசிகர்களை கொள்ளை கொண்ட போட்டியாளராக திகழ்கிறார்.

பவர்ஃபுல் பர்த்டே
பிக் பாஸ் வீட்டில் பவர் காயின் வைத்திருக்கும் பாவனி இந்த வாரம் முழுக்க பவருடன் தனது பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாட உள்ளார். அதன் காரணமாக கூட பழைய பகைகளை மறந்து விட்டு மற்ற போட்டியாளர்கள் உடன் சண்டை போடாமல் இந்த வாரத்தை சுமூகமான முறையில் பாவனி கடப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாவனியின் சாம்ராஜ்யம்
சிம்மாசனம் எல்லாம் போட்டு பாவனியை அடுத்த ஐஸ்வர்யா தத்தாவாக மாற்ற பிக் பாஸ் இடி முழக்கம் வசனம் எல்லாம் போட்டுருக்காங்க. பிக் பாஸ் குழு எதிர்பார்க்கும் அளவுக்கு சும்மா பாகுபலி சிவகாமி தேவி போல பவராக ஆட்சி செய்வாரா? இல்லை பதமாக பக்குவமாக இந்த வாரத்தை கடந்து ஓட்டுகளை குவிப்பாரா? என்பதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

திடீர் மாற்றம்
பாவனிக்கு பவர் கிடைச்சிடுச்சுப்பா இந்த வாரம் பிக் பாஸ் வீடே இரண்டாக போகுது என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஆரம்பத்திலேயே அவர் அணுகிய முறையை பார்த்து இவ்ளோ நல்லவரா பாவனி. எப்படி திடீர்னு இப்படி மாறிட்டாரே என அக்ஷரா ஆர்மியினர் எல்லாம் கிண்டல் அடிக்க ஆரம்பித்து விட்டனர்.

பாப்பா காப்பி அடிக்குது
பவர் காயினை வைத்துக் கொண்டு பந்தா பண்ணாமல் ரூல்ஸ் மீறும் போட்டியாளர்களுக்கு சின்ன சின்ன தண்டனைகளை மட்டுமே பாவனி கொடுத்து வருகிறார். பெட்ரூம் ஏரியாவிலே அனைவரும் படுக்கலாம். வெளியே படுக்க அவசியம் இல்லை என அனைவரையும் அரவணைத்து பாவனி போவதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் இந்த பாப்பா நிரூப்பை பார்த்து காப்பி அடிக்குது என கலாய்த்து வருகின்றனர்.

சுருதி போன பயம்
கேமுக்காக தாமரை காயினை திருடிய சுருதியை மக்கள் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்களே, அவருக்கு உதவியாக இருந்த நம்மையும் வெளியேற்றி விடுவார்களோ என்கிற பயம் பாவனியின் மனசுக்குள் வந்ததால் தான் இப்படியொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக் காட்டி வருகின்றனர். பாவனி பர்த்டே வரைக்கும் தான் இப்படி இருப்பார் அப்புறம் பாருங்க எப்படி பாயப் போகிறார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். வெயிட் பண்ணி பார்ப்போம்!


Click it and Unblock the Notifications











