சுருதிக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கா? எவிக்ஷன் குறித்து பிக் பாஸ் வீட்டில் என்ன பேசினாங்க தெரியுமா?
சென்னை: நாடியா சங் வெளியேறும் போது இல்லாத பயம் அபிஷேக் ராஜா எலிமினேட் ஆன வாரத்தில் அவர் முகத்தில் தாண்டவம் ஆடியது.
அதே போலத்தான் சனிக்கிழமை எபிசோடிலேயே சுருதியின் முகம் டோட்டலாக வாடி இருந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் தான் வெளியேறப் போவதாக சுருதி சொன்னதை கேட்ட ரசிகர்கள் எல்லாமே பக்கா ஸ்க்ரிப்டட்டா? என்கிற கேள்வியை முன் வைத்து வருகின்றனர்.

எதிர்பார்க்கவில்லை
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து சுருதி தான் வெளியேறுவார் என்பதை ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. சுருதி தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்கிற தகவல் கசிந்த நிலையில், பிக் பாஸ் ரசிகர்கள் இந்த எவிக்ஷனை ஏற்கமுடியாது என கொந்தளித்து ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டுத் தள்ளினர்.

சுருதிக்கே தெரிஞ்சிருக்கு
இந்த வாரம் நான் வெளியேறினா வெளியில போய் செய்ய நிறைய வேலை இருக்கு என சுருதி கமல் சார் வருவதற்கு முன்பாகவே பேசும் காட்சி வேண்டும் என்றே திணிக்கப்பட்டது போல இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மொத்தமும் ஃபேக்
பிக் பாஸ் வீட்டில் வரும் கலைஞர்கள் எல்லாமே திறமையான நடிகர்களாக உள்ளார்கள் என்றும் எவிக்ஷன் குறித்து சுருதிக்கு முன்னமே தெரிந்து இருப்பதால் தான் அவர் இப்படி பேசியுள்ளார் என்றும் யார் யார் எத்தனை வாரங்கள் நிகழ்ச்சியில் இருப்பார்கள் என அறிவித்த பின்னர் தான் உள்ளேயே வருவார்கள் என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

அபிநய் தான் போவான்
சுருதியை தேற்றும் விதமாக நிரூப் இந்த வாரம் அபிநய் தான் போவான் எனக் கூறியதை கேட்ட ரசிகர்கள் நாங்களும் அதைத் தான் எதிர்பார்த்தோம். ஆனால், நடக்கலையே என புலம்பி வருகின்றனர் தாமரை காயினை திருடியது ஒரு குத்தமாய்யா அதுக்காகவா சுருதியை வெளியே அனுப்புறீங்க என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

காட்டுவதில்லை
சுருதி மட்டுமின்றி ஐக்கி பெர்ரி, பாவனி, மதுமிதா, அபிநய் உள்ளிட்ட பலரும் இந்த வாரம் நாம தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவோம் என தனித்தனியாக பேசுவார்கள். ஆனால், ஷோவின் போது யார் வெளியேற்றப்பட உள்ளாரோ அவர் பேசியதை மட்டுமே எடிட்டர்கள் கட் செய்து போடுவது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











