twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண் கிரிக்கெட்டர் வாழ்க்கை வரலாறு... கதாநாயகியாக நடிப்பவர் இவரா ?

    |

    மும்பை - இந்திய பெண்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வருபவர் மிதாலி ராஜ்.

    1999 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக முதல் முதலில் கிரிக்கெட்டில் களம் இறங்கியவர். தற்போது வரை இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் அசைக்க முடியாத ஒரு சிறந்த ஆட்டக்காரராக விளையாடி வருகிறார்.

    மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்தியில் எடுக்கப்பட்ட படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

    சிவகார்த்திகேயன் படத்தின் அழகான இணைப்பு... எஸ்கே20 படத்தின் அடுத்த அப்டேட்! சிவகார்த்திகேயன் படத்தின் அழகான இணைப்பு... எஸ்கே20 படத்தின் அடுத்த அப்டேட்!

    பெண் டெண்டுல்கர்

    பெண் டெண்டுல்கர்

    ஆண் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ், டெண்டுல்கர், கங்குலி, டிராவிட் போன்றவர்களை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த சூழலில் இந்திய நாட்டில் மித்தாலி ராஜ் எனும் பெண் கிரிக்கெட்டரை பற்றி பேசும்படி செய்தவர். மகளிர் கிரிக்கெட் அணியில் " லேடி டெண்டுல்கர் " என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். Test, ODI மற்றும் T20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் மிதாலி ராஜ் ஆவார்.

    ப்ளேயர் மற்றும் கோச்

    ப்ளேயர் மற்றும் கோச்

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மிதாலி ராஜ் வெறுமனே ஆட்டக்காரராக மட்டுமில்லாமல் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். கிரிக்கெட்டில் ஆட்டக்காரராக இருந்துகொண்டே அதே அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றுவது மிக சிலருக்கு நடந்து இருக்கிறது. இது மிதாலி ராஜ் எவ்வளவு பெரிய ஆட்டக்காரர் என்பதை தெளிவுப்படுத்துகிறது. உலகக் கோப்பை ஆட்டங்களில் 1000 ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர் இவரே ஆவார்.

    விருதுகள்

    விருதுகள்

    மிதாலி ராஜ் அவரது கிரிக்கெட் துறையில் சிறந்து விளங்கியதற்காக பல விருதுகளை வென்றுள்ளார். 2003 ஆம் ஆண்டு அர்ஜுனா விருது, 2015 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, 2017 ஆம் ஆண்டு BBC அறிவித்த 100 பெண்களில் ஒருவர் என்ற விருது, 2017 ஆம் ஆண்டு விஸ்டன் கிரிக்கெட்டர் விருது மற்றும் இந்தியாவின் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருதை 2021 ஆண்டு பெற்றுள்ளார்.

    மித்தாலி ராஜ் ஆக நடிக்கும் நடிகை

    மித்தாலி ராஜ் ஆக நடிக்கும் நடிகை

    வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தில் தமிழில் அறிமுகமான நடிகை டாப்ஸி. அவர் பல மொழிகளில் நடித்து சிறந்த நடிகை என பெயர் வாங்கியவர். பெண்கள் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைகளில் நம்பர் ஒன் ஆக இருப்பவர். தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு படத்தில் மிதாலி ராஜ் ஆக நடித்துள்ளார். இதற்காக அவர் பல மாதங்கள் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவருடன் பழகி அவர் போல உடல் அசைவுகளை கற்றுள்ளார். தற்போது அந்தப் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Is Taapsee Pannu acting as lead role in Women Cricketer Mithali Raj Story Biopic Movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X