தானா சேர்ந்த கூட்டம் வெற்றி படமா...? வெள்ளை அறிக்கை வெளியிடுவரா ஞானவேல் ராஜா?

By Shankar

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும், நடிகர்களும் தொழில் நுப்பவளர்ச்சியில் தங்களை முன்னிலைப்படுத்தவும், பிரபலபடுத்திக் கொள்ளவும் மெனக்கெடுகின்றனர். ஆனால் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்ட முயற்சிக்கும் மனோவியாதியில் சிக்கி கொண்டு தங்களை மட்டும் அல்ல பிறரையும் ஏமாற்றி வருகின்றனர்.

ஜனவரி 12 அன்று ரீலீஸ் ஆன படங்கள் வெற்றி படமா அல்லது தோல்வியா என்பதை உறுதி பட கூற குறைந்த பட்சம் ஒரு வாரமாவது வேண்டும்.

Is Thaana Serntha Koottam a success movie?

திரைப்பட தயாரிப்பாளர், அதனை வாங்கும் விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருக்கும் லாபம் கிடைத்தால் அது வெற்றிப் படம் என கூற முடியும். படம் ரீலீஸ் ஆன ஐந்தாவது நாள் 'சக்ஸஸ்பிரஸ் மீட்' நடத்துவது தவறான போக்கு என்கின்றனர் வினியோகஸ்தர்கள். தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்திகளான ரஜினி, விஜய் படங்களுக்கு கூட இப்படி கூற முடியாத நிலை உள்ளது.

தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த சூர்யா நடித்து பொங்கல் அன்று வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' வெற்றி பெற்றதாக அறிவிக்கும் 'சக்ஸஸ் பிரஸ் மீட்' இன்று மாலை சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.

"தமிழ்நாடு விநியோக உரிமை 32 கோடி ரூபாய்க்கு திருச்சி பரதன் பிலிம்ஸ் வாங்கி ஏரியா அடிப்படையில் பிரித்து விற்பனை செய்தனர். கடந்த ஐந்து நாட்களில் தமிழ்நாடு மொத்த வசூல் 30 கோடி என்கிறது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம். இதில் கேளிக்கை வரி, ஜிஎஸ்டி பிடித்தம் போக எஞ்சிய 27 கோடியில் திரையரங்குகளின் வாடகை அல்லது பங்கு 30% கழிக்கப்பட்டால் 18.90 கோடி நிகர வருமானம். அசலில் 60% சதவீதம் வந்திருக்கும் நிலையில், வெற்றிப் படம் என எப்படி அறிவிக்க முடியும்? தெலுங்கில் இந்த படம் கல்லா கட்டியிருந்தாலும் தமிழகத்தில் விலை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் மடியில் நெருப்பை கட்டிக் கொண்டு அவஸ்தைப்படுவது தெரியுமா நடிகர் சூர்யாவுக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும்," என்கிறார்கள் திரையிட்டவர்கள்.

தமிழ் சினிமாவில் தியேட்டர் டிக்கட் விற்பனை, வியாபாரம், நடிகர்கள் சம்பளத்தில் நேர்மையும், வெளிப்படை தன்மையும் இருக்க வேண்டும் என சினிமா விழா மேடைகளில் முழக்கமிடுவது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வாடிக்கை.

அவரது தயாரிப்பில் வெளிவந்த 'தானா சேர்ந்த கூட்டம்' வெற்றிப்படம் என்றால், படத்தின் தயாரிப்பு செலவு, வியாபாரம், அரசு நிர்ணயித்த கட்டணத்தில் திரையரங்குகளில் வசூலான தொகை, போன்ற தகவல்களை பொதுவெளியில் வெள்ளை அறிக்கையாக வெளியிடுவாரா ஞானவேல்ராஜா என்பதே திரையுலகினரிடையே விவாதிக்கப்படும் பொருளாக இன்று உள்ளது.

-ஏகலைவன்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X